இந்திய ஒற்றுமை யாத்திரை : தாய்க்கு ஷூ லேஸ் கட்டி விட்ட ராகுல் காந்தி
இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தி தனது தாய்க்கு ஷூ லேஸ் கட்டி விடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, கடந்த 30-ம் தேதியில் இருந்து கர்நாடகாவில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
தசரா திருவிழாவுக்காக அக்டோபர் 4 மற்றும் 5-ஆம் தேதி விடுமுறை விடப்பட்டிருந்ததைத் தொடா்ந்து, ராகுல் காந்தி மைசூரில் முகாமிட்டு ஓய்வெடுத்தார். அவரைக் காண்பதற்காகவும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் சோனியா காந்தி கடந்த 3-ஆம் தேதி மைசூருக்கு வருகை தந்தாா்.
மேலும் படிக்க | ஜார்ஜ் பொன்னையாவை அடுத்து இந்து சாமியாரை சந்தித்த ராகுல்!
நேற்று விஜய தசமியை ஒட்டி மைசூருவில் சோனியா காந்தி சிறப்புப் பூஜைகள் செய்தார். இருநாட்கள் விடுமுறைக்கு பிறகு, மண்டியா மாவட்டத்தில் ராகுலின் நடைபயணம் இன்று மீண்டும் தொடங்கியது. இதில் சோனியா காந்தியும் பங்கேற்றார். உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்வுகளில் கந்துகொள்ளாமல் இருந்த சோனியா காந்தி, நீண்ட நாட்களுக்குப் பின் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
நடைபயணத்தின் போது, தாயிடம் ராகுல் காந்தி மிகப் பரிவுடன் நடந்துகொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில், வைரலாகி உள்ளது. சோனியா காந்திக்கு ஷூ லேஸ் கட்டி விட்ட ராகுல், பின்னர் ஓய்வெடுக்குமாறு கூறி அவரை காரில் ஏற்றி அனுப்பினார்.
மேலும் படிக்க | ராகுல் காந்தி நடப்பதால் என்ன நடக்கும்?... சீமான் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ