மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கென ஒரு இந்தியாவையும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒரு இந்தியாவையும் உருவாக்க விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெற்கு ராஜஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பன்ஸ்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், அனைவரையும் ஒருங்கிணைத்து, அனைவரின் கலாச்சாரங்களையும் மதித்து முன்னேற வேண்டும் என காங்கிரஸ் கூறுவதாகவும், மக்களைப் பிரிக்கவும், நசுக்கவும், ஒடுக்கவும் பாஜக செயல்படுவதாகவும், இது இரு சித்தாத்தங்களுக்கு இடையேயான சண்டை எனவும் குறிப்பிட்டார்.


மேலும் படிக்க | 15 நிமிட உரை... "நேரம் வந்துவிட்டது" பாஜகவை குறிவைத்த சோனியா காந்தி


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பொருளாதாரம் வலுப்பெற்றதாகவும், ஆனால் மோடி அரசு பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியை தவறாக அமல்படுத்தியதால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துள்ளதாகவும், பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்களுளின் வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளதாக ராகுல்காந்தி விமர்சித்தார். 


பா.ஜ.க.வும், பிரதமர் நரேந்திர மோடியும் பணக்காரர்கள் மற்றும் சில தொழிலதிபர்களுக்காக ஒரு இந்தியாவையும், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்காக ஒரு இந்தியாவையும் உருவாக்க விரும்புவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து பேசிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், அமைதியும், நல்லிணக்கமும் இருந்தால்தான் நாடு முன்னேறும் எனவும், அனைத்து மதங்களையும் மதிப்பது நமது கடமை எனவும் குறிப்பிட்டார். நாட்டின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறிய அவர், நாடு அரசியலமைப்பின் அடிப்படையில் ஒற்றுமையுடன் இயங்க வேண்டும் எனவும் கூறினார்.


மேலும் படிக்க | சிபிஎஸ்இ-யில் நீக்கப்பட்ட பாடங்கள்..ராகுல்காந்தி கண்டனம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR