ரஃபேல் போர்விமான ஊழல் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடி வரும் ராகுல் காந்தி தற்போது, "ராணுவ வீரர்களின் தியாகத்தை மோடி அவமதித்துவிட்டார்" என தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைப்பெற்றுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... "இந்திய அரசின் ஆலோசனையின் பேரில் தான் 'டஸால்ட்' ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது. இதில் பிரான்ஸ் அரசு தனிப்பட்டமுறையில் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.


இவரது கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்கட்சிகள் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அரசு இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இந்திய அரசின் பரிந்துரையின் பேரிலேயே டஸால்ட்' ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.


இதனையடுத்து ராகுல் காந்தி தனது கேள்விகளை மேலும் பலமாக்கி தனது ட்விட்டர் பக்கதின் வாயிலாக குரல் எழுப்பி வருகின்றார். அந்த வகையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...




“பிரதமர் மோடியும், அம்பானியும் இணைந்து பாதுகாப்பு படை மீது துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளனர். நமது வீரர்களின் தியாகத்தை மோடி அவமதித்துவிட்டார். மோடியை நினைத்து வெட்கப்படுகிறோம். இந்தியாவின் ஆன்மாவுக்கு துரோகம் இழைத்துவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார்!