நாடுமுழுவதும் விஷத்தை பரப்புகிறார் மோடி -ராகுல் தாக்கு!
நடந்து முடிந்த மக்களவே தேர்தலில் நரேந்திர மோடியில் தேர்தல் பிரச்சாரங்கள் பொய், வெறுப்புணர்வு மற்றும் விஷங்களால் நிரம்பியிருந்தது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!
நடந்து முடிந்த மக்களவே தேர்தலில் நரேந்திர மோடியில் தேர்தல் பிரச்சாரங்கள் பொய், வெறுப்புணர்வு மற்றும் விஷங்களால் நிரம்பியிருந்தது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கு விதமகா மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் அமோதியில் தோற்கடிக்கப்பட்ட ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்று மக்களவை சென்றுள்ளார். இதனால் தனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்று தந்த கேரளா மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராகுல் கேரளா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் பேசிய அவர் "மக்களவைத் தேர்தலின்போது, பிரதமர் மோடியின் பிரச்சாரம், பொய்களாலும், விஷம் போல் தீங்கு விளைவிப்பதாகவும், வெறுப்புணர்வை தூண்டும்விதமாகவும் இருந்தது. காங்கிரசின் பரப்புரை, உண்மையையும், அன்பையும், பாசத்தையும், பரப்புவதாக அமைந்திருந்தது என தெரிவித்தார்.
மேலும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், நாட்டில் விஷத்தை பரப்புபவர்களுடனும், தேசத்தை பிளவுபடுத்த நினைப்பவர்களுடனும் கடுமையாக மோதியதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசினார்.
முன்னதாக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மாலத்தீவிற்கு சென்ற பிரதமர் மோடி இன்று கேரளா மாநிலம் குருவாயூர் கோவில் சென்று பிராத்தனை செய்தார். ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் மோற்கொண்டிருக்கும் அதேவேலையில், பிரதமர் மோடியும் கேரளாவிற்கு சென்றது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.