இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகள், என்பது குறிப்பிடதக்கது. இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினியாகும். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றையும் அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தியவர், 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்பட்டார். 


அவரின் பிறந்தநாளையொட்டி ராகுல்காந்தியை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திராகாந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தமிழ்நாடு மாநில நிர்வாகிகளின் அறிவுறுத்தலின்படி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பகிறது