புது டெல்லி: இந்தியா திங்கள்கிழமை காலை நிலவரப்படி 40,425 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்கள் (Coronavius) பதிவாகியுள்ளது, மொத்தம் 11,18,043 ஆக உள்ளது. இறப்பு எண்ணிக்கை 681 அதிகரித்து 27,497 ஆக உயர்ந்துள்ளது. இது புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கையிலும் இறப்புகளிலும் அதிக ஒற்றை நாள் உயர்வு ஆகும். இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜனவரி மாதம் கேரளாவில் (Kerala) கண்டறியப்பட்டது. அவர் சீனாவில் இருந்து நாடு திரும்பியவர்களில் ஒருவர். நமது அண்டை நாடான சீனாவில் டிசம்பர் முதலே அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. ஆனால் அப்பொழுது அந்த வைரஸ் குறித்த வீரியம் அறியாமல் மத்திய அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அதிலும் முக்கியமாக சர்வதேச விமான சேவையை நிறுத்தவும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் சரியான மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.


மறுபுறம் கொரோனா வைரசின் தாக்கம் உணரத்தொடங்கிய உலக நாடுகள் பொது முடக்கத்தை (Lockddoen) அமல்படுத்த ஆரம்பித்தனர். இந்தியாவிலும் மார்ச் மாதம் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவியிருந்தது. இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், எந்தவித சரியான திட்டமிடல் இல்லாமல், அமல் செய்யப்பட்ட ஊரடங்கு காரணமாக இலட்சக்கணக்காக புலம் பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் என பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சி மற்றும் மத்திய அரசின் செயல்பாடு மீது கேள்வி எழுப்பப்பட்டது.


ALSO READ | 'பைத்தியம் மீண்டும் அதே காரியத்தைச் செய்கிறது' மத்திய அரசை தாக்கும் ராகுல்!


கொரோனா காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தனது சமூக ஊடகங்கள் மூலம் ராகுல் காந்தி எச்சரித்து வந்தார். 


நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை உணர்ந்த மத்திய அரசு, மாநில அரசுகள் ஆலோசனை செய்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஊரடங்கு போடப்பட்டதால், வறுமையால் வாடும் ஏழை மக்களுக்கு தேவையான நிதித்தொகுபு, இலவச சிலிண்டர் உட்பட சில திட்டங்களை அறிவித்தது.


ALSO READ | சீன பொருட்களை அதிகம் வாங்குவது மக்கள் இல்லை அரசு தான் -ராகுல் காந்தி


இந்தநிலையில், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி (Rahul Ganthi) , தனது ட்விட்டர் பக்கத்தில், சில சம்பவங்கள் மேற்கோள்காட்டி மத்திய அரசை சாடியுள்ளார்.


கொரோனா காலத்தில் அரசாங்கத்தின் சாதனைகள்:


> பிப்ரவரி - ஹலோ டிரம்ப்
> மார்ச்   - மத்திய பிரதேச அரசாங்கத்தை கவிழ்த்தல்
> ஏப்ரல்  - மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்.
> மே    - பாஜக அரசின் 6 ஆம் ஆண்டு
> ஜூன்  - பீகாரில் மெய்நிகர் பேரணி
> ஜூலை- ராஜஸ்தான் அரசு கவிழ்க்க முயற்சிக்கிறது


அதனால்தான் கொரோனா போரில் நாடு "தன்னிறைவு பெற்றது" எனப் பதிவிட்டுள்ளார்.


 



ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் (Oxford University) உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசியை தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற விரும்புவதாக இந்திய சீரம் நிறுவனம் (Serum Institute of India) தெரிவித்துள்ளது. உரிமம் வாங்கியவுடன் இந்தியாவில் சோதனைகள் தொடங்கும். ஆரம்பகால சோதனைகளில் இந்த தடுப்பூசி பயனுள்ள மற்றும் பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவ இதழான தி லான்செட்டில் தெரிவித்துள்ளது.


ALSO READ | கொரோனாவையும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது: ராகுல்!