ஆப்பிள் நிறுவனத்த்தின் உதவியுடன் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்ற தொழில் வர்த்தக கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு பேசினார் அப்போது:-


நாடு முழுவதும் ரயில் சேவையின் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். இதற்காக ரூ.18000 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு மத்திய அரசின் ஒப்பதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


இந்த மிகை வேக விரைவு ரயில்கள் டெல்லி - மும்பை மற்றும் டெல்லி - கோல்கட்டா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும். 


இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்க அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. என்று அமைச்சர் தெரிவித்தார்.