ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என கொடந்து கோரிக்கை வைக்கப்பட்டு  வலியுறுத்தப்பட்டு வந்ததை அடுத்து, அமைச்சரவை விரிவாக்கப்படுகிறது. முன்னதாக, அம்மாநிலத்தில் அமைச்சர்கள் அனைவரும்  ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, முதல் அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கிய முன்னாள் துணை முதல் அமைச்சர் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், முதல்வர் அலுவலகத்திலிருந்து (CMO) கிடைத்த தகவலின்படி, ஹேமராம் சவுத்ரி, மகேந்திரஜித் மாளவியா, ராம்லால் ஜாட், மகேஷ் ஜோஷி, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா, மம்தா பூபேஷ், பஜன்லால் ஜாதவ், திகாரம் ஜூலி, கோவிந்த் ராம் மேக்வால் மற்றும் சகுந்தலா ராவத் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், எம்எல்ஏக்கள் ஜாஹிதா கான், பிரிஜேந்திர ஓலா, ராஜேந்திர குடா மற்றும் முராரிலால் மீனா ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.


ALSO READ | மூன்று வேளாண் சட்டங்கள் பற்றிய விரிவான தகவல் & கடந்து வந்த பாதை!


அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவகள் பட்டியலில் உள்ள, ஹேமராம் சவுத்ரி, ரமேஷ் மீனா, முராரிலால் மீனா மற்றும் பிரிஜேந்திர ஓலா  ஆகியோர் பைல்ட் அதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து (பிஎஸ்பி) காங்கிரசில் இணைந்த 6 எம்எல்ஏக்களில், ராஜேந்திர குடாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க உள்ளது


கடந்த ஆண்டு, விஸ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் முதல்வர் அசோக் கெலாட்டின் தலைமைக்கு எதிராக போர் கொடி தூக்கியதை அடுத்து அவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களில் விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரின் பெயர்கள் பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | மேலாடையை நீக்காமல் தொடுவதும் பாலியல் வன்முறை தான்: உச்ச உச்ச நீதிமன்றம்


ராஜினாமா செய்த அமைச்சர்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் இன்று (21-11-21) பிற்பகல் 2 மணிக்கு கூடுகிறார்கள். அதைத் தொடர்ந்து இன்று ராஜ்பவனில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.