காங்., பைலட்டை சமாதானப்படுத்த சாத்தியமில்லை, ராஜஸ்தானில் கவிழும் காங்., ஆட்சி?
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது... ஏனெனில் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது விசுவாசமுள்ள MLA-களுடன் கட்சியை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார்..!
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது... ஏனெனில் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது விசுவாசமுள்ள MLA-களுடன் கட்சியை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார்..!
நாடு முழுவதும் நிலவும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நீடித்து வருகின்றது. மாநில துணை முதல்வரான சச்சின் பைலட் குறிப்பிட்ட சில MLA-களை அழைத்துக் கொண்டு BJP-யில் இணைய டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதன் காரணமாக ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஜெய்ப்பூரில் உள்ள முதல்வர் அசோக் கெஹ்லோட் இல்லத்தில் நடந்த சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்கு பிறகு, முதல்வர் அசோக் தலைமையிலான மாநில அரசை ஆதரிக்க 109 MLA-களின் ஆதரவு இருப்பதாக ஆளும் காங்கிரஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது. "முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கத்திற்கும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையையும் நம்பி ஒரு கடிதத்தில் மொத்தம் 109 MLA-கள் கையெழுத்திட்டுள்ளனர்" என்று ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே செய்தியாளர் சந்திப்பில் தகவலை தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் தூதுக்குழு ஜெய்ப்பூருக்குச் சென்றுள்ளதாகவும் கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
READ | முடக்கு வாதத்தின் தீவிரத்தைக் குறைக்க நானோ துகள்கள் வடிவமைப்பு!!
முன்னதாக, சச்சின் பைலட்டிற்கு இன்று காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் கெஹ்லோட் தலைமையில் நடைபெற இருக்கும் காங்கிரஸ் MLA-களின் முக்கிய கூட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பினை அவர் புறக்கணித்துள்ளார். இந்நிலையில் பைலட் இன்று பாஜக தலைவர் JP நாடாவை சந்திக்க வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து, ராஜஸ்தான் காங்கிரஸ் நெருக்கடி மற்றும் சச்சின் பைலட்டின் அடுத்த நடவடிக்கை குறித்து பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது. டெல்லியில் காத்திருக்கும் அவருக்கு பாஜக தலைமைய சந்திக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.