முடக்கு வாதத்தின் தீவிரத்தைக் குறைக்க நானோ துகள்கள் வடிவமைப்பு!!

இன்ஸ்டிடியூட் ஆப் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி விஞ்ஞானிகள் முடக்கு வாதத்தின் தீவிரத்தை குறைக்க சிட்டோசனுடன் நானோ துகள்களை வடிவமைத்துள்ளனர்!!

Last Updated : Jul 13, 2020, 09:18 AM IST
முடக்கு வாதத்தின் தீவிரத்தைக் குறைக்க நானோ துகள்கள் வடிவமைப்பு!!

இன்ஸ்டிடியூட் ஆப் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி விஞ்ஞானிகள் முடக்கு வாதத்தின் தீவிரத்தை குறைக்க சிட்டோசனுடன் நானோ துகள்களை வடிவமைத்துள்ளனர்!!

முடக்கு வாதத்தின் தீவிரத்தை குறைக்க மொஹாலியை தளமாகக் கொண்ட நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (INST) விஞ்ஞானிகள் சிட்டோசனுடன் நானோ துகள்களை உருவாக்கியுள்ளனர். துத்தநாக (ஸிங்க்) குளுகோனேட் ஏற்றப்பட்ட இந்த நானோ துகள்கள், முடக்கு வாதத்தின் (Rheumatoid Arthritis) தீவிரத்தைக் குறைக்கக்கூடியவை ஆகும். INST என்பது இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அரசாங்கத்தின் தன்னாட்சி நிறுவனம் ஆகும்.

துத்தநாகத் தனிமம் எலும்பு ஒடுக்கநிலையை இயல்பாகப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அளவு முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகளில் குறைவதாகக் கூறப்படுகிறது. துத்தநாகம் குளூகோனேட் வடிவில் வாய் மூலம் கொடுக்கப்படும் துத்தநாகம் மனிதர்களின் உடம்பில் மருந்து இருப்பைக் குறைக்ககூடியது எனத் தெரியவந்துள்ளது.

சிட்டோசன் எனப்படும் உயிரியக்க இணக்கமான மக்கும் இயற்கை பாலிசாக்கரைடு (polysaccharide), வெளிப்புற எலும்பு அமைப்பிலிருந்து பெறப்பட்ட ஏராளமான பயோபாலிமர்கள் உறிஞ்சுதலை அதிகமாக ஊக்குவிக்கும் இயல்பு கொண்டது. மேலும், அது மக்கக்கூடிய, உயிரியக்க இணக்கமான, நச்சுத்தன்மையாற்ற இயல்பில் உறிஞ்சுதன்மையுடையது என்பதால், குறிப்பாக சிட்டோசனை விஞ்ஞானிகள் குழு தேர்வு செய்துள்ளது. அண்மைக்காலம் வரை, சிட்டோசன் நானோதுகள்களை வகுக்க அயனி புவி முறைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில், பல்வேறு மருத்துவ குணமுள்ள தீவிர மருந்துத் தன்மை உள்ளது. 

READ | உங்களுக்கு தெரியுமா?.. உடலுறவுக்கு யோகா மிகவும் முக்கியமானது... 

இரட்டை வடிகட்டிய நீரில் சிட்டோசன், சோடியம் டிரைபாலிபாஸ்பேட் பயன்படுத்தி, துத்தநாக குளூகோனேட் ஏற்றப்பட்ட சிட்டோசன் நானோ துகள்களை விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளது. சிட்டோசன் நானோதுகள்களுடன் துத்தநாக குளூகோனேட் சேர்க்கப்பட்டது. நானோ துகள்கள் பல்வேறு பௌதிக ரசாயனப் பொருள்களுக்கான இயல்பை கொண்டது. விஸ்டார் எலிகள் மூலம் இதைப் பரிசோதித்த போது கொலாஜன், தூண்டப்பட்ட கீல்வாதத்துக்கு எதிரான ஆற்றல் கொண்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், துத்தநாக குளூகோனேட், அது ஏற்றப்பட்ட சிட்டோசன் நானோ துகள்கள் வாதத்தின் தீவிரத்தைக் குறைத்ததுடன், மூட்டு வீக்கம், எரித்தீமா, எடிமாவையும் குறைக்கூடியது என ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர். 

மேலும், துத்தநாக குளூகோனேட் ஏற்றப்பட்ட நானோ துகள்கள் சிறந்த செயல்பாட்டைக் காட்டியது. உயிரி ரசாயன ஆய்வு, திசுக்கள் கண்காணிப்பு, நோய் எதிர்ப்பு திசு வேதிப்பொருள் வெளிப்பாடு என பல்வேறு அம்சங்களை அந்தகுழு மதிப்பிட்டது. இதில், வெறும் துத்தநாக குளூகோனேட்டை விட, துத்தநாக குளூகோனேட் ஏற்றப்பட்ட சிட்டோசன் நானோதுகள்கள் சிறப்பாக குணமளிக்கக்கூடியவை என தெரியவந்தது. துத்தநாக குளூகோனேட் ஏற்றப்பட்ட சிட்டோசன் நானோதுகள்களின் அழற்சி ஆற்றலே இதற்கு காரணம் என அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

More Stories

Trending News