ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அருகே உள்ள வனப்பகுதியில் வினோதமான முறையில் உயிரிழந்து கிடக்கும் இரண்டு உடல்களை போலீசார் கடந்த வாரம் கைப்பற்றியிருந்தனர். தற்போது அந்த சம்பவத்தின் பின்னணி வெளியாகி பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அந்த வனப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்தபோது அந்த உடல்களை கைப்பற்றினர். அந்த உடல்களில் ஒருவர் ஆண் என்றும் மற்றொருவர் பெண் என்றும் முதலில் தெரியவந்தது. அதில், அந்த ஆணிண் தொண்டையில் வெட்டுப்பட்டிருந்தது. அந்த பெண்ணை அடித்தே கொன்றுள்ளனர் என்பதும் தெரியவந்தது. 


மேலும், அவர்கள் நடுகாட்டில் நிர்வாணமான முறையில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உடலுறவு மேற்கொண்டது போலவும், அவர்களின் உடலில் அதிக பசைத்தன்மை உடைய சூப்பர் க்ளூ என்ற பசையால் அவர்கள் பிணைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 


இந்த விவகாரத்தில், 52 வயதான ஒரு மந்திரவாதி என அறியப்படுவருக்கு தொடர்பிருப்பதாக உதய்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்,. 


இதுகுறித்து, காவல்துறை தரப்பில்,"அரசுப்பள்ளி ஆசிரியரான ராகுல் மீனா (32), சோனு கான்வார் (31) ஆகியோர்தான் உதயப்பூரின் கேளா பாவ்டி காட்டுப்பகுதியில் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் வேறு வேறு நபர்களுடன் திருமணமானவார்கள். ஆனால், அவர்கள் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளனர். 


மேலும் படிக்க | 10,000 ஊழியர்கள் பணிநீக்க விவகாரம்! அமேசானுக்கு சம்மன் அனுப்பிய தொழிலாளர் நல அமைச்சகம்!


அவர்களின் உடல்களை கண்டெடுத்த பின்னர், 200க்கும் மேற்பட்டவர்களை விசாரித்துள்ளோம். சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். 


அப்போது பாலேஷ் ஜோஷி என்பவரை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் இருவரையும் கொலைசெய்தது அவர்தான் என அவரே ஒப்புக்கொண்டார். பாலேஷ் ஜோஷி தன்னை ஒரு மந்திரவாதியாக அடையாளப்படுத்தியுள்ளார். 


அப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள் தொடங்கி பல தொழிலதிபர்கள் வரை இவரை நாடி வரும் அளவிற்கு செல்வாக்குடன் இருந்துள்ளார். பத்வி குடா பகுதியில் உள்ள கோயிலில் இவர் வசித்து வருகிறார். இவர் மக்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பவர் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 


உயிரிழந்த சோனு, ராகுல் ஆகியோருக்கு அந்த கோயிலில்தான் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மந்திரவாதி என கூறப்படும் ஜோஷியை சந்திக்க சோனு அடிக்கடி கோயிலுக்கு வந்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த ராகுலின் மனைவியும் மந்திரவாதி என கூறிக்கொள்ளும் ஜோஷியை சந்தித்துள்ளார். 


அப்போது, ராகுலுடன் அடிக்கடி பிரச்சனை நடப்பதாக அவரின் மனைவி ஜோஷியிடம் கூர, அப்போது ராகுல் - சோனு உறவு குறித்து ஜோஷி, ராகுல் மனைவியிடம் கூறியுள்ளார். ராகுல் மனைவிக்கு இந்த விவகாரம் தெரியவந்தபின்,  ராகுல் - சோனு ஆகியோர் ஜோஷியை மிரட்டியுள்ளனர். ஜோஷிக்கு அவப்பெயர் ஏற்படுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை தொடரப்போவதாகவும் கூறியுள்ளனர். 


இதனால், தனக்கு மக்களிடையே செல்வாக்கு குறையக்கூடாது என்பதற்காக ராகுல், ஜோஷியை கொலை செய்ய ஜோஷி திட்டமிட்டுள்ளார். அதற்காக, விரைவாக உலரும், அதிக பசைத்தன்மை உடைய சூப்பர் க்ளூ என்ற பசையை அவர் வாங்கியுள்ளார். ஏறத்தாழ 50 ட்யூப்களை வாங்கி, அதை அனைத்தையும் ஒரு பாட்டில் ஊற்றியுள்ளார். 1 ட்யூப்பின் விலை 15 ரூபாய். 


கடந்த நவ. 18ஆம் தேதி இரவில், ராகுல் - ஜோஷி ஆகியோரிடம் சமாதனம் பேச இருவரையும் தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துசென்றுள்ளார். உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால், நீங்கள் இந்த காட்டுப்பகுதியில் உடலுறவு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது தான் இருக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். ஜோஷியை நம்பிய அந்த ஜோடி அந்த நடுகாட்டிலேயே உடலுறவு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் உடலுறவு மேற்கொள்ள ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மீண்டும் அங்கு வந்த ஜோஷி, அவர்களின் மேல் அந்த பசையை ஊற்றியுள்ளார். அந்த பசையை ஊற்றியதால், அவர்களால் பிரியவும் முடியவில்லை, அசையவும் முடியவில்லை. 


அப்போது, ராகுலின் தொண்டையில் ஜோஷி வெட்டி கொலைசெய்தார். தொடர்ந்து, சோனுவையும் அடித்தே கொன்றுள்ளார்" என தெரிவித்தனர். அந்த இரு உடல்களும், சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் இருந்தது என போலீசார் தெரிவிக்கின்றனர். 


அந்த பசையில் இருந்து விடுபட அந்த ஜோடிகள் கடுமையாக முயன்றுள்ளனர், அவை விரைவாக உலர்ந்து, அதிக பசைத்தன்மையுடயது என்பதால் அவற்றில் இருந்து வெளிவர முடியாமல் தவித்துள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர். ராகுலின் ஆணுறுப்பு வெட்டப்பட்டிருப்பதாகவும், அந்த உடல்களை எரிக்கவும் ஜோஷி முயன்றுள்ளதாகவும் தெரிவித்தார். 


ஜோஷியின் கைகளில் இருந்த பசைப் பொருளை வைத்துதான் போலீசார் அவரை அடையாளம் கண்டுள்ளனர். ஜோஷியை கைதுசெய்த உடன் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பலர் அவரை விடுதலை செய்யக்கோரி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், வழக்கு விவரங்களை அவர்களிடம் கூறியவுடன் அனைவரும் வந்த வழியாகவே திரும்பிவிட்டாதகவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ஸ்வர்ணரேகா நதி: இது இந்தியாவின் ‘தங்கம்’ பாயும் நதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ