ராஜஸ்தான் அரசியல் சண்டை முடிவுக்கு வருமா? ராகுல்- பிரியங்காவை சந்தித்த சச்சின் பைலட்

ராஜஸ்தானில் நடந்து வரும் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில், சச்சின் பைலட்டின் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி: ராஜஸ்தானில் நடந்து வரும் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில், முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட் (Sachin Pilot) முன்னாள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவை திங்கள்கிழமை பிற்பகல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ராஜஸ்தான் மக்களின் முன்னேற்றங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறியுள்ளனர்.
ஆளும் காங்கிரஸ் (Congress) கட்சிக்குள் ஒரு பெரும் சண்டை நிலவி வருகிறது. கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் அரசின் முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு (Ashok Gehlot) எதிராக போர் கொடியை உயர்த்தி இருக்கிறார்கள். இந்தநிலையில் சச்சின் பைலட்டின் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ALSO READ | அனைத்தையும் மறக்கலாம், திரும்பி வாருங்கள்... ப.சிதம்பரம் சச்சின் பைலட்டிற்கு அறிவுரை
ஏனென்றால் ராஜஸ்தானில் (Rajasthan) நடைபெற்று வரும் அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த சந்திப்பு ஒரு முக்கிய படியாக இருக்கக்கூடும் என்று மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.
சச்சின் பைலட்டின் சந்திப்பு திங்கள்கிழமை பிற்பகல் ராகுல் காந்தியின் இல்லத்தில் நடந்தது. இந்த கட்டத்தில் பிரியங்கா காந்தி வாத்ராவும் கூட்டத்தில் கலந்து கொண்டார். இது ராஜஸ்தானில் நடந்த அரசியல் நிகழ்வுகள் பற்றியது. ஆனால் தற்போது எந்த விவரங்களும் கிடைக்கவில்லை என்று முக்கியத் தகவல்களை அறிந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் (Sonia Gandhi) இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
ALSO READ | நான் BJP-யில் இணைய மாட்டேன் - சச்சின் பைலட் திட்டவட்டம்
காங்கிரசில் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், இதில் சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியாளர்களாக மாறியுள்ளனர் மற்றும் பகுஜன் சமாஜ் (Bahujan Samaj Party) கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. 200 உறுப்பினர் சட்டசபையில், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா (BJP) கட்சியில் 72 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.