பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியடைய காரணம் மோடி அரசு: ராகேஷ் திகாயித்
இந்து-முஸ்லிம் இடையே பதற்றத்தை அதிகரித்தால், அது அவர்களுக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பது அரசுக்குத் தெரியும் என்றார்.
புது டெல்லி: விவசாயிகளின் தலைவர் ராகேஷ் திகாயித் கூறுகையில், பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியடைய முக்கியக் காரணம் மோடி அரசு தான். இந்து-முஸ்லிம் இடையே பதற்றத்தை அதிகரித்தால், அது அவர்களுக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பது அரசுக்குத் தெரியும் என்றார். அந்த போட்டியில் இந்திய அணி தோற்றால், அது பாஜகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பது மோடி அரசுக்குத் தெரியும் என்றார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியில் இந்திய அணியை தோற்கடிக்க முடிவு செய்யப்பட்டது என்றார்.
ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய வீரர்களை பலிகடா ஆக்கினால், அதன்மூலம் ஆளும் அரசுக்கு (உ.பி. அரசு) அதிக வாக்குகள் கிடைக்கும் என்றால் அதையும் மோடி அரசு செய்யும் என்றார். இப்போது தேர்தல் வரப்போகிறது, எனவே அவர்களுக்கு சில புதிய திட்டங்கள் தேவை. சமூக ஊடகங்களில் முஸ்லிம் வீரருக்கு எதிராக அரசாங்கம் பிரச்சாரம் செய்கிறது. மக்களிடையே சண்டையை ஏற்படுத்துவது தான் இதன் நோக்கமாகும் என்றார்.
தானும் ஒரு வீரர் என்று கூறிய ராகேஷ் திகாயித், இந்தப் போட்டியில் இந்தியாவின் தோல்வியால் அவரது மனமும் புண்பட்டது எனக் கூறினார்.
பாஜகவினர் பஹரூபியர்கள் என்று கூறினார். பிச்சைக்காரனும் வணிகனும் நாட்டை நேசிப்பதில்லை. பிச்சைக்காரனுக்கு ஒரு இடத்தில் பிச்சை கிடைக்கா விட்டால் வேறு சதுக்கத்திற்குச் சென்றுவிடுவார். வியாபாரியும் அப்படியே செய்கிறான். எங்கு தொழில் செய்ய வசதியாக இருக்கிறதோ, அங்கேயே தனது தளத்தை அமைத்துக் கொள்கிறார்கள். அதுபோல தான் பாஜகவும்.
ALSO READ | முகமது ஷமி குறித்து அவதூறு - வெட்கக்கேடானது என கம்பீர் கண்டனம்
முன்பு இருந்தவர்கள் கூறினார்கள், அதாவது கிராமங்களில் பா.ஜ.க. வளர விடக்கூடாது, அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது, ஏனென்றால், அவர்கள் (பாஜக) வந்தால் அங்கு இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவார்கள் என்றார்கள். அவர்களின் வார்த்தைகள் உண்மை என்று நிரூபணமாகியுள்ளது. தற்போது நாட்டிலும் இப்படித்தான் சூழல் இருக்கிறது.
ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக தேசவிரோதி என்பது தனக்கும் 2014-க்குப் பிறகுதான் தெரிந்தது. இந்தியா பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு இந்து முஸ்லிம்களுக்கு இடையே நடந்த சண்டை, மோடி அரசின் உத்தரவின் பேரில் நடந்தது என்றார். இது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது.
இந்துக்களும் இரண்டு வகையினர் என்றார். சங்கத்தின் வழிமுறைகளைப் பின்பற்றுபவர். அவர் மிகவும் ஆபத்தானவர். மற்ற வகை இந்துக்கள் தீங்கு விளைவிப்பதில்லை. அவர்கள் அமைதியை விரும்புபவர்கள் என்றார்.
இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு தேச விரோத கோஷங்களை எழுப்பியது பாஜக தான் என்று கூறினார். இந்த அரசு தனது சொந்த நலனுக்காக எதையும் செய்யும் என்றார்.
ALSO READ | இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி இஸ்லாமின் வெற்றி: பாகிஸ்தான் அமைச்சர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR