புதுடெல்லி: கோவிட் -19 தடுப்பூசியின் முதல் ஷாட்டை சனிக்கிழமை (மார்ச் 13, 2021) பெற்ற பிறகு, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, தடுப்பூசி போட்டுக்கொண்டது சிரமமில்லாமலும், வலியில்லாமலும் இருந்தது என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து மக்களும் மிக விரைவிலேயே தடுப்பூசி மூலம் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் ரத்தன் டாடா (Ratan Tata) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த செய்தியை வெளியிட்டார். அவர் தனது பதிவில், "இன்று எனது முதல் தடுப்பூசி எனக்கு வழங்கப்பட்டது. மிக்க நன்றி!! இதில் எந்த சிரமத்தையும் வலியையும் நான் எதிர்கொள்ளவில்லை. அனைவருக்கும் விரைவில் நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படும் என நான் நம்புகிறேன்." என்று எழுதியுள்ளார்.



2021 ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய நாடு தழுவிய COVID-19 தடுப்பூசி செயல்முறையில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பதிவு செய்த நாளில் ரத்தன் டாடா இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) கருத்துப்படி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட (20,53,537) கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் தடுப்பூசி செயல்முறையின் 56 வது நாளில் (மார்ச் 12) 30,561 அமர்வுகள் மூலம் வழங்கப்பட்டன. இது இதுவரை ஒரே நாளில் வழங்கப்பட்ட அதிகபட்ச டோஸ் எண்ணிக்கையாகும்.


ALSO READ: நெகிழ வைத்த Ratan Tata, Twitter-ல் பாராட்டும் மக்கள்: அப்படி அவர் செய்தது என்ன?


"16,39,663 பயனாளிகளுக்கு முதல் டோஸ் (சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணி வீரர்கள்) தடுப்பூசி (Vaccine) போடப்பட்டது. மேலும் 4,13,874 முன்னணி வீரர்களுக்கு 2 வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது” என்று MoHFW தெரிவித்துள்ளது.


தற்காலிக அறிக்கையின்படி சனிக்கிழமை காலை 7 மணி வரை 2.82 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் 4,86,314 அமர்வுகள் மூலம் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 72,93,575 சுகாதாரப் பணியாளர்கள் (முதல் டோஸ்), 41,94,030 சுகாதாரப் பணியாளர்கள் (2 வது டோஸ்), 72,35,745 முன்னணி வீரர்கள் (முதல் டோஸ்) மற்றும் 9,48,923 முன்னணி வீர்ரகள் (2 வது டோஸ்), நாள்பட்ட நோய்களைக் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட 12,54,468 பயனாளிகள் (முதல் டோஸ்) மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 72,91,716 பயனாளிகள் ஆகியோர் அடங்குவர்.


பிப்ரவரி 2 ஆம் தேதி முன்னணி வீர்ரகளுக்கான தடுப்பூசி செயல்முறை தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களைக் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அடுத்த கட்டம் மார்ச் 1 முதல் தொடங்கியது. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 24,882 பேர் புதிதாக COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2.02 லட்சமாக உயர்ந்தது.


ALSO READ: COVID-19 vaccine போட்டுக் கொண்டு100வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி Watch Video


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR