நெகிழ வைத்த Ratan Tata, Twitter-ல் பாராட்டும் மக்கள்: அப்படி அவர் செய்தது என்ன?

ரத்தன் டாட்டாவின் இந்த உன்னதமான செயலால் இணையவாசிகள் அவரை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். பலர் ட்விட்டரில் அவரைப் பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 6, 2021, 06:06 PM IST
  • முன்னாள் ஊழியரைக் காண மும்பையிலிருந்து புனே சென்ற ரத்தன் டாட்டா.
  • ஊழியர் 2 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
  • டிசம்பர் 28, 2012 அன்று ரத்தன் டாட்டா சேர்மன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
நெகிழ வைத்த Ratan Tata, Twitter-ல் பாராட்டும் மக்கள்: அப்படி அவர் செய்தது என்ன?

உலகில் வாழும் பல மனிதர்களில் சிலர் மட்டும் தங்கள் செயல்களால் மிகவும் உயர்ந்து நிற்கிறார்கள். தங்கள் ஆர்ப்பாட்டமற்ற அன்பாலும், பாரபட்சமற்ற குணத்தாலும் அவர்கள் அனைவரது மனங்களிலும் இடம் பெற்று விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ரத்தன் டாட்டா அவர்கள்.

தற்போது அவர் செய்துள்ள ஒரு செயல் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்துள்ளது. ஒரு உன்னதமான சைகையில், ரத்தன் டாட்டா (Ratan Tata) திங்களன்று உடல் நலம் குன்றிய ஒரு முன்னாள் ஊழியரை சந்திக்க மும்பையில் இருந்து புனேவுக்கு பயணம் செய்தார். அந்த ஊழியருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் சரியாக இல்லை. இந்த சந்திப்பைப் பற்றி, அந்த ஊழியருக்கு நெருக்கமான யோகேஷ் என்ற நவர் ஒருவர் லிங்க்ட்இனில் வெளியிட்டார். இந்த இடுகை இப்போது சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகியுள்ளது.

83 வயதான ரத்தன் டாட்டா, முன்னாள் ஊழியரை சந்திக்க புனேவில் (Pune) உள்ள பிரண்ட்ஸ் சொசைட்டிக்கு சென்றார்.

முன்னாள் ஊழியரின் நண்பர் யோகேஷ், தனது பதிவில், ரத்தன் டாட்டாவும் அந்த ஊழையரும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

"சர் ரத்தன் டாட்டா (83) ஒரு அரிய மனிதர். இந்தியாவில் தற்போது இருக்கும் தொழிலதிபர்களில் அவர் மிகச் சிறந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு முன்னாள் ஊழியரை சந்திக்க அவர் மும்பையில் (Mumbai) இருந்து புனேவில் உள்ள பிரண்ட்ஸ் சொசைட்டிக்குச் சென்றார். பெரிய மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவருடன் மீடியா கூட்டமோ, பாதுகாவலர்களின் கூட்டமோ வரவில்லை. அவருடன் இருந்தது அவரது ஊழியர்கள் மீது அவர் காட்டும் அன்பு மட்டும்தான். இவரிடமிருந்து நம் நாட்டில் உள்ள தொழிலதிபர்களும், வளர்ந்து வரும் தொழில்முனைவோரும் பல விஷயங்களைக் கற்ருக் கொள்ள வேண்டும். பணம் மட்டும் உலகம் அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு சிறந்த மனிதராக இருப்பதுதான் மிகவும் தேவையானது. ஹேட்ஸ் ஆஃப், ஐயா!! உங்களுக்கு எனது வணக்கங்களும் மரியாதையும்” என்று யோகேஷ் தனது பதிவில் லிங்க்ட்இனில் எழுதியிருந்தார்.

ALSO READ: ரத்தன் டாட்டா கால்தொட்டு ஆசிபெற்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி

தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் தராத பல நிறுவனங்கள் இருக்கும் நாட்டில், முன்னாள் ஊழியர் ஒருவரை, வயது முதிர்ந்த காலத்திலும், வேறு ஒரு ஊருக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்து வருவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். ரத்தன் டாட்டா எந்த விளம்பரமும் இல்லாமல் இந்த செயலை செய்துள்ளார் என்பது அவரது குணத்திற்கு உதாரணமாய் அமைந்துவிட்டஒரு நிகழ்வாகும்.

ரத்தன் டாட்டாவை பாராட்டும் இணையவாசிகள்

ரத்தன் டாட்டாவின் இந்த உன்னதமான செயலால் இணையவாசிகள் (Netizens) அவரை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். பலர் ட்விட்டரில் அவரைப் பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

"பணிவே ஆளுமையாக இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த மரியாதையை செலுத்துகிறேன் ஐயா” என்று ஒரு பயனர் கூறினார்.

ரத்தன் டாட்டா 1991 முதல் டாடா சன்ஸ் (Tata Sons) நிறுவனத்தின் சேர்மனாக இருந்தார். டிசம்பர் 28, 2012 அன்று அவர் சேர்மன் பதவியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார்.

ALSO READ:  Watch Video: Tech-ன் உதவியால் தாயாகி குழந்தைக்கு பாலூட்டிய தந்தை, வைரலாகும் Video

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News