பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில், சோன்பர்சா சட்டசபை தொகுதியின் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ரத்னேஷ் சதா, வெள்ளிக்கிழமையன்று அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், எம்.எல்.ஏ சதாவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோன்பர்சா (எஸ்சி) தொகுதியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர் ரத்னேஷ் சதா என்பதோடு, பிரபலமான தலித் சமூகத் தலைவராகவும் உள்ளார். .இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சா ஹெச்ஏஎம்(எஸ்) (Hindustani Awam Morcha HAM(S)) நிறுவனருமான ஜிதன் ராம் மாஞ்சியின் மகனுமான சந்தோஷ் குமார் சுமன், சமீபத்தில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இருந்து விலகினார். அவரது இடத்தை தற்போது ரத்னேஷ் சதா பெற்றுள்ளர்.


யார் இந்த ரத்னேஷ் சதா?
சோன்பர்சா சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ ரத்னேஷ் சதா, ஒரு தலித் தலைவர் மற்றும் பீகார் முன்னாள் முதல்வரும் HAM தலைவருமான ஜிதன் ராம் மஞ்சியைப் போல முசாஹர் சமூகத்தைச் சேர்ந்தவர். தற்போது, சதாவை அமைச்சராக மாற்றியிருப்பது பீகார் முதலமைச்சரின், முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.



இவரது தந்தை லட்சுமி ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, ரத்னேஷ் சதா பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. எம்எல்ஏ ரத்னேஷ் சதாவுக்கு, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.


சதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு 1.30 கோடி என்றும், அவர் மீது குற்ற வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் அவர் தேர்தலில் போட்டியிடும்போது சமர்ப்பித்த பிரமாணப் பத்திரம் கூறுகிறது.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் நிறைவேறுமா - நாளை உத்தரவு வெளியாகும்!


மாஸ்டர் ஸ்ட்ரோக்காக, சந்தோஷ் சுமன் வைத்திருந்த எஸ்சி மற்றும் எஸ்டி நலத்துறையும் சதாவுக்கு வழங்கப்படலாம். தனது கட்சியான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவை ஆளும் கட்சியுடன் இணைக்க ஜேடி-யுவிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டிய சுமன், அண்மையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஜேடி-யுவிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சதா, கபீர்பாண்டி பிரிவினருடன் தொடர்புடையவர் என்பதால் அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


ரத்னேஷ் சதா - குடும்பப் பின்னணி
ரத்னேஷ் சதா தனது வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும் போராட்டங்களையும் சந்தித்துள்ளார். சதா அரசியலுக்கு வருவதற்கு முன்பு ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தினார். ரத்னேஷ் சதா, மஹிஷி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிமர் கிராமத்தில் வசிப்பவர். அவரது குடும்பம் சோன்பர்சாவின் கஹ்ரா குடியில் அமைந்துள்ள வார்டு எண். 6 இல் வசிக்கிறது.


அரசியல் வாழ்க்கை
ரத்னேஷ் சதாவின் அரசியல் வாழ்க்கை 1987 இல் தொடங்கியது. இருப்பினும், அவர் 2010 இல் ஜேடியு ஒதுக்கீட்டில் இருந்து, பீகாரின் சோன்பர்சா தனி தொகுதி இருந்து எம்.எல்.ஏ ஆனார். தொடர்ந்து மூன்று முறை, அதே தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜேடியுவின் மகாதலித் செல்லின் தலைவராகவும் உள்ளா சதா, ஜேடியு துணைத் தலைவர் உட்பட கட்சியின் பிற முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜி இலக்கா மாற்றம்... அரசுக்கு மீண்டும் கொடைச்சல் கொடுக்கிறாரா ஆளுநர்?


நிதீஷ் குமாரின் மாஸ்டர்ஸ்ட்ரோக்


எம்எல்ஏ ரத்னேஷ் சதா ஜேடியு மகாதலித் செல் தலைவராக உள்ளார். 2020 சட்டமன்றத் தேர்தலில் சோன்பர்சா ரிசர்வ் தொகுதியில் இருந்து காங்கிரஸின் தர்னி ரிஷிதேவை தோற்கடித்து சதா வெற்றி பெற்ற சதா, தற்போது ஜேடி-யு-வின் கொறடாவாக உள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் ரத்னேஷ் சதா அமைச்சராகியிருப்பது நிதீஷ்குமாரின் (Nitish Kumar) மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று கருதப்படுகிறது.


மக்கள்தொகை நிறைந்த வடக்கு பீகாரில் இருந்து வந்த ரத்னேஷ் சதாவிற்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பது, ஜிதன் ராம் மஞ்சி ஏற்படுத்தக்கூடிய சேதத்தை நடுநிலையாக்கும் என்று கருதப்படுகிறது, குறிப்பாக அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பினால், 2024 மக்களவைத் தேர்தலில் சதாவின் செல்வாக்கு நிதீஷ்குமாருக்கு உதவியாக இருக்கும்.


"1980 களில் இருந்து பல அரசாங்கங்களில் அமைச்சராக இருந்த போதிலும், தலித்துகளுக்கு அவர் வெறும் வாய் பேச்சு அளவில் மட்டுமே சேவை செய்தார்" என்று மஞ்சி மீது சோன்பர்ஷா எம்.எல்.ஏ சதா குற்றம் சாட்டுகிறார்.


பீகார் அமைச்சரவை விரிவாக்கம்


2022 ஆகஸ்டில் மகா கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்காக JD(U) BJP உடனான தனது உறவை முறித்துக் கொண்ட பின்னர் நீண்ட காலமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. சுமன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது பீகார் அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் உள்ளனர். சட்டசபையின் மொத்த பலத்தின் அடிப்படையில், அதிகபட்சமாக 36 அமைச்சர்கள் இருக்கலாம்.


243 இடங்கள் கொண்ட பீகார் சட்டசபையில் மகா கூட்டணிக்கு 164 எம்எல்ஏக்கள் உள்ளனர். அமைச்சரவையில் RJD க்கு 16 அமைச்சர்களும், JD(U) 11 மற்றும் காங்கிரஸுக்கு 2 அமைச்சர்களும் உள்ளனர். சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் உள்ளார்.HAM க்கு மொத்தம் நான்கு எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் உள்ளனர்.


மேலும் படிக்க | வடமாநிலத்தவர்கள் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ