புதுடெல்லி: மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெயரில், பல கிளர்ச்சியாளர்கள் இப்போது குழப்பத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளனர், மேலும் பொது மக்களின் அமைதியைக் குலைப்பதே அவர்களின் நோக்கமாக இருப்பதும் தெளிவாகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜ்யசபா எம்.பி. சுபாஷ் சந்திரா தனது நிகழ்ச்சியை ஹரியானா மாநிலம் ஹிசாரில் நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று தனது 'சக விவசாயிகளிடம்' வேண்டுகோள் விடுத்த ரவி ஆசாத், அதற்கு ஒரு நாள் கழித்து இப்போது ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு அச்சுறுத்தல் வெளியிட்டிருப்பது பல  கேள்விகளை எழுப்புகிறது.  


பாரதிய கிசான் யூனியனின் (Bharatiya Kisan Union (BKU)) ஹரியானாவின் இளைஞர் தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஆசாத், இப்போது தனது அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியிடப்பட்ட 26 நிமிட வீடியோவில் ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் செளதாவுக்கு எதிராக பேசுகிறார். 


Also Read | பிஜேபி வேட்பாளர் குஷ்பு சுந்தருடன் சிறப்பு நேர்காணல்


மாநிலங்களவை எம்.பி. சுபாஷ் சந்திராவை ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்காததற்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் ரவி ஆசாத் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. ஹரியானா சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகராக இருந்த பாரதிய ஜனதா தலைவர் கன்வர் பால் குஜ்ஜரை வீழ்த்த அவர் மக்களிடம் 'வேண்டுகோள் விடுக்கிறார்' என்று நம்பப்படுகிறது.


"பிஜேபி தலைவர்கள் அனைவருக்கும் மார்ச் 31 அன்று ஹரியானா முழுவதும் 'சிகிச்சை நடத்தப்படும்" என்றும் ரவி ஆசாத் பேஸ்புக் நேரலையிலும் தெரிவித்திருக்கிறார்.  


முன்னதாக, நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. சுபாஷ் சந்திரா அவர்கள், தனது நிகழ்ச்சியை ஒழுங்காக நடத்த முடியாதபடி, 'இளைஞர்கள்' தங்கள் 'தடிகளை' தயார் செய்யுமாறு ரவி ஆசாத் அறைகூவல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


Also Read | அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR