ரெப்போ வட்டி விகிதம் 6%-லிருந்து 5.75%-மாக குறைப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கைக் கமிட்டி ரெப்போ வட்டி விகிதம் 6%-லிருந்து 5.75%-மாக குறைத்துள்ளது!
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கைக் கமிட்டி ரெப்போ வட்டி விகிதம் 6%-லிருந்து 5.75%-மாக குறைத்துள்ளது!
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மூலம் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் பதவியேற்ற பிறகு 3-வது முறையாக அடுத்தடுத்து ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6%-மாக நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் கடன்வட்டி விகிதம் குறையும் என தகவல்கள் வெளியாகும் நிலையில் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அரசின் அதிகாரப்பூர்வ தகவலில் மொத்த உள்நாட்டு உற்பத்திதி முதல் காலாண்டில் 5.8 %-மாக உள்ளது. அதாவது இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற நிலையை இழந்து விட்டது என்பதாகும். பிப்ரவரி மற்றும் ஏப்ரல் கொள்கை மதிப்பீட்டில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கைக் கமிட்டி நடத்திய இந்த ஆலோசனை குழ கடந்த திங்கள் அன்று துவங்கியது. பணவியல் கொள்கையில் ஒரு இணக்கமான நிலைப்பாட்டை பராமரித்தல் என்னும் கருத்தியலில் இந்த கூட்டம் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நாணய கொள்கைக் கமிட்டியில் பாமா டுஹா, ரவிந்தாரா தொல்காரியா, மைக்கெல் டெப்பாரட்டா பாத்ரா, சேத்தன் காட்டே, விரல் வி ஆச்சாரியா மற்றும் சக்தி காந்த தாஸ் ஆகியோர் வட்டி குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் பொருப்பேற்றதில் இருந்து இதுவரை 0.50% வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.