₹ 2000: சட்டப்பூர்வமான பணத்தாள்! ஆனால் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது?!
RBI decision to scrap Rs 2000 notes: செப்டம்பரில் இருந்து 2000 ரூபாய் நோட்டு பரிவர்த்தனைகளுக்கு பயன்படாது என்ற அறிவிப்பு பலருக்கும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ₹ 2000: சட்டப்பூர்வமான பணத்தாள்! ஆனால் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது... இதன் பொருள் என்ன?
தற்போது பணத்தாளாக இருக்கும் 2000 ரூபாய் நோட்டு வெறும் காகிதமாக மாறிவிடும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மக்கள், தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். அதன்பிறகு வங்கிகள் 2000 ரூபாய் நோட்டுகளை ஏற்காது. 2000 நோட்டுகள் சட்டப்பூர்வமானதாக இருக்கும் ஆனால் அவற்றைக் கொண்டு பரிவர்த்தனைகள் செய்யமுடியாது.
ஆனால், சட்டப்பூர்வமானதாக இருக்கும் நோட்டுகள் செல்லாது என்செப்டம்பர் 30 கடைசி தேதி, அதன் பிறகு 2000 நோட்டு என்ன ஆகும் தெரியுமா?
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு (INR 2000 Currency Notes) கடந்த காலத்தின் ஒரு விஷயமாக இருக்கும் என்ற முடிவை இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும், அதாவது தற்போது உங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை எந்த வங்கியிலும் சென்று மாற்றிக்கொள்ளலாம். இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க | செப்டம்பர் 30க்கு பிறகு ரூ.2000 நோட்டு செல்லுமா? RBI சொன்ன முக்கிய தகவல்!
இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்துள்ள ரிசர்வ் வங்கி, மற்ற ரூபாய் மதிப்பு நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ₹2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. முன்னதாக, 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை கிடையாது
முதலாவதாக, இது பணமதிப்பிழப்பு நடவடிக்கை அல்ல, உங்களிடம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் குப்பையாகப் போவதில்லை, அதாவது மோடி அரசின் முந்தைய பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்றதில்லை இது. 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதால், 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இது வெறும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகும், இது கடந்த காலத்திலும் பலமுறை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதி, 2000 நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் மாற்றலாம். செப்டம்பர் 30 க்குப் பிறகு இந்த பணத்தாள்கள் என்னவாகும்?
’Clean Note Policy’ என்ற கொள்கையின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கிளீன் நோட் பாலிசி என்றால் என்ன?
பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்ட கொள்கை தான் இந்த கிளீன் நோட் பாலிசி. இதன்படி 2,000 ரூபாய் நோட்டுகளின் செல்லுபடியாகும் காலம் செப்டம்பர் 30 வரை இருக்கும். அதுவரை,இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். அதுவரை நீங்கள் சந்தையில் இந்த நோட்டுகளை பரிவர்த்தனை செய்யலாம்,
செப்டம்பர் 30 க்குப் பிறகு, அவற்றை மாற்றுவதற்கு நீங்கள் ரிசர்வ் வங்கிக்குச் செல்ல வேண்டும். செப்டம்பர் 30ம் தேதி வரை உங்களால் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் இருந்து மாற்ற முடியவில்லை என்றால், அதன் பிறகு ஆர்பிஐ மூலம் மாற்றிக்கொள்ள முடியும்.
ஒரே நேரத்தில் எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படும்?
மக்கள் வங்கிகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் அதே நேரத்தில், இந்த நோட்டுகள் சந்தையில் இருந்து அகற்றப்படும், அவை வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும், அவை மீண்டும் புழக்கத்திற்கு விடப்படாது. இந்த வழியில், அவை முற்றிலும் அகற்றப்படும்.
மேலும் படிக்க | ₹2000 நோட்டை திரும்ப பெறுகிறது RBI... வெளியான பரபரப்பு தகவல்!
வங்கிகளில் மற்ற வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க, ஒரே நேரத்தில் ரூ.20,000 மதிப்புள்ள இரண்டாயிரம் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும், அதாவது ஒரே நேரத்தில் 10 நோட்டுகள் மட்டுமே மாற்றப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2000 நோட்டு அச்சடிப்பது எப்போது நிறுத்தப்பட்டது?
2000 நோட்டு நவம்பர் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, 2018-19 க்குப் பிறகு இந்த பணத்தாள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. அச்சிடுவது நிறுத்தப்பட்ட பிறகு, ஏடிஎம்கலில் நிரப்பப்படவில்லை, வங்கிகளுக்கு வரவும் இல்லை. சுத்தமான நோட்டுக் கொள்கையின் (Clean Note Policy) கீழ், ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன. இது 1988 இல் செயல்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்துவிட்டு புதிய நோட்டுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இந்த கொள்கை நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது சந்தையில் சிறிது பணத் தட்டுப்பாடு இருந்தாலும். ஆனால் இம்முறை நிலைமை முற்றிலும் மாறுபட்டது. சந்தையில் கரன்சி தட்டுப்பாடும் இல்லை அல்லது 2000 நோட்டுகளை சார்ந்து இருப்பதும் இல்லை.
சந்தையில் எத்தனை 2000 நோட்டுகள் உள்ளன?
2000 ரூபாய் நோட்டுகளில் 89% மார்ச் 2017க்கு முன் அச்சடிக்கப்பட்டவை என்று ரிசர்வ் வங்கி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2000 ரூபாய் நோட்டுகளில் 10.8% மட்டுமே புழக்கத்தில் உள்ளது. அவை சந்தையில் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன.
2023 மார்ச் 31 அன்று புழக்கத்தில் உள்ள 2,000 நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பே போதுமானதாக உள்ளது என்பது தெரிய வந்ததைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் “கிளீன் நோட் பாலிசியின்படி”, ₹2000 மதிப்புடைய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | GNCTD: தேசிய தலைநகர் சிவில் சேவைகள் ஆணையம் அமைக்க அவசரச்சட்டம்: மத்திய அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ