கடன் பெற்றவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் அளிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 31 வரை கடன் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா முழு அடைப்புக்கு மத்தியில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுப்பட்டார். இந்த சந்திப்பின் போது அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது பண நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு இந்த நடவடிக்கை உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக ரிசர்வ் வங்கி அறிவித்த தற்காலிக தடை மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், இப்போது கடன் வாங்குபவர்களுக்கு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை தாமதப்படுத்த விருப்பம் கொடுக்கிறது. இதன் பொருள் அவர்கள் இந்த மாதங்களுக்கான கடன்களுக்கு EMI செலுத்த வேண்டியதில்லை.



அதாவது கடன் தடை தற்காலிகமாக ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதன் பொருள் ஆறு மாத காலத்திற்கு கடன்களை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை அளிக்கிறது. 2021 மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூலதனத்திற்கான ஓரங்களை மூல நிலைக்கு மீட்டெடுக்க கடன் வழங்கும் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த சந்திப்பின் போது மற்ற பெரிய அறிவிப்புகளும் வெளியானது. அந்த வகையில் குறைக்கப்பட்ட ரெப்போ வீதம் அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் அறிவிப்பு படி ரெப்போ வீதத்தை 40 அடிப்படை புள்ளிகளால் குறைத்து 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைத்தது, இது கடன் வாங்குபவர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்தது. 


COVID-19 நெருக்கடியை அடுத்து திட்டமிடப்பட்ட மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு முன்பு கூடி, ரெப்போ வீதக் குறைப்புக்கு ஆதரவாக 5: 1 என்ற விகிதத்தில் வாக்களித்ததாக தாஸ் தெரிவித்தார். அதேவேளையில் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35%-ஆக குறைக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.


முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியால் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார பொதி அறிவிக்கப்பட்டது, இது குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கியிருந்தார். இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநரின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.