RBI Penalty:  இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சில விதிகளை மீறியதற்காக வங்கிகளுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'வைப்புத்தொகையாளர் விழிப்புணர்வு நிதி திட்டம்' தொடர்பான விதிகளை மீறியதற்காக தனலட்சுமி வங்கிக்கு ரூ .27.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோரக்பூரில் உள்ள NE மற்றும் EC ரயில்வே Multi-State Primary Cooperative Bank  என்னும் வங்கி மீதும், சில ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனலட்சுமி வங்கிக்கு அபராதம் 


ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட அறிக்கையில், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949  என்னும் சட்டத்தின் ஒரு பிரிவை மீறியதற்காக தனலட்சுமி வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது டெபாசிட்டருக்கான தகவல் மற்றும் விழிப்புணர்வு நிதி திட்டம், 2014  என்பதன் கீழ் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததால், முதன்மை கூட்டுறவு வங்கிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


வங்கிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் 


வங்கியின் மேற்பார்வை மதிப்பீட்டிற்கான (ISE) சட்டபூர்வமான ஆய்வில், மார்ச் 31, 2020 அன்று, வங்கிகளின் நிதி நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் சட்டத்தின் விதிகள் மீறபட்டிருப்பது கண்டறியப்பட்டது. விதி மீறலுக்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை விளக்குமாறு வங்கிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


ALSO READ  | Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்கையில் ஏற்படும் பொதுவான தவறுகள்..!!


வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு இருக்கும்


தனிப்பட்ட விசாரணையில், ரிசர்வ் வங்கி அனுப்பிய நோட்டீஸ்களுக்கு  வங்கி அளிக்கும் பதிலை பரிசீலித்த பிறகு, ரிசர்வ் வங்கி, இந்த அபராதத்தை விதித்துள்ளது. இருப்பினும், இந்த அபராதம் ஒழுங்குமுறை விதிகளை கடைபிடிக்காமல் இருந்ததால் விதிக்கப்பட்ட அபராதம். கூட்டுறவு வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்திற்கு எந்த வித பாதிப்பு இல்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியது.


இதற்கு முன்பே, பல வங்கிகள் மீது நடவடிக்கை


கடந்த மாதம் ஜூலை மாதம், விதிகளை மீறியதற்காக ஆக்சிஸ் வங்கிக்கு ரூ .5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனுடன், கடன்களை வழங்குவது தொடர்பான சில விதிகளை மீறியதற்காக 14 வங்கிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), இண்டஸ்இண்ட் வங்கி, பந்தன் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகள் அடங்கும். இந்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ரூ .50 லட்சம் முதல் ரூ .2 கோடி வரை அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Finance Ministry: என்று முடிவுக்கு வரும் வருமான வரித்துறை இணையதளக் கோளாறு Infosys?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR