சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க எவ்வளவு தொகை செலவானது?
மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுகாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த 8 நாட்களுக்கு சுமார் ரூ.70 லட்சம் செலவானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் சூரத்தில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்கியிருந்த விடுதி Deepor Beel ஏரிக்கு அருகே, கவுகாத்தி பல்கலைக்கழகம், அசாம் பொறியியல் கல்லூரிக்கு அண்மையில் அமைந்துள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கான சொகுசு ஹோட்டலின் வெவ்வேறு தளங்களில் மொத்தம் 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. அவர்கள் தங்கியிருந்த ஜூன் 22-ம் தேதியில் இருந்து 29-ம் தேதி வரை, ஓட்டலில் உள்ள உணவகங்கள் மற்றும் பார்ட்டி ஹால்கள் மூடப்பட்டன. ஓட்டலில் தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே உணவகத்தின் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | ஆட்டோ ஓட்டுநர் To மகாராஷ்டிரா முதலமைச்சர் - யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?
மகாராஷ்டிர எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்ததற்கு எவ்வளவு செலவானது என்பது குறித்த தகவலை வெளியிட ஓட்டல் நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், அவர்கள் அனைவரும் டீலக்ஸ் எனப்படும் உயர்தர அறைகளில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சொகுசு ஓட்டலின் இணைய தளத்தின் படி, அங்குள்ள உயர்தர அறைக்கு நாளொன்றுக்கு ரூ.8,500 வாடகை ஆகும்.
எனவே ஜிஎஸ்டியோடு சேர்த்து மொத்தமாக அறை வாடகைக்காக சுமார் ரூ.68 லட்சம் செலவழிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் உணவுக்காக மட்டும் ரூ.22 லட்சம் செலவழிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் எல்.எல்.ஏ.க்கள் ஓட்டலை விட்டு வெளியேறும்போது மொத்த தொகையையும் செலுத்தி விட்டதாகவும், நிலுவைத்தொகை எதுவும் இல்லை ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR