27 ஆண்டுகளுக்குப் பிறகு வேளாண் பேராசிரியர் பதவிக்கு ஆட்சேர்ப்பு, ஆனால் இந்த விதி ஒரு தடையாக மாறியது
2018 ஆம் ஆண்டில் 20 பாடப் பிரிவுகளுக்காக 5 ஆயிரம் விரிவுரையாளர் பதவிகளுக்கு RPSC (Government Jobs in Rajasthan 2020) ஆட்சேர்ப்பு செய்தது.
ஜெய்ப்பூர்: 2018 ஆம் ஆண்டில் 20 பாடப் பிரிவுகளுக்காக 5 ஆயிரம் விரிவுரையாளர் பதவிகளுக்கு RPSC (Government Jobs in Rajasthan 2020) ஆட்சேர்ப்பு செய்தது... அவற்றில் 370 பதவிகள் விவசாய பேராசிரியர்கள் பதவியும் அடங்கும். ஆனால் இங்கு தான் சிக்கல் முளைத்தது. பேராசிரியர் பதவிக்கு B.Ed பட்டம் பெற்றிருப்பது அவசியம் என ஆர்.பி.எஸ்.சி. தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து, வேளாண்மையில் எம்.எஸ்.சி பட்டம் பெற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
எம்.எஸ்.சி படித்தவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இறுதியில் சுமார் 650 பேர் தேர்ச்சி பெற்றனர், ஆனால் இப்போது இறுதி முடிவில், பி.எட் பட்டம் இல்லாதவர்கள் விலக்கப்படுகிறார்கள், இதனால் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வேளாண் பேராசிரியர் நியமனம் தொடர்பாக மாநில அமைச்சர்கள் மூன்று பேர் உட்பட சுமார் 73 எம்.எல்.ஏ.க்கள் மாநில தேர்வு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். “27 ஆண்டுகளுக்குப் பிறகு, வேளாண் பேராசிரியரின் ஆட்சேர்ப்பு செய்யும்போது, அதில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பி.எட். பட்டம் பெறாதவர்கள். வேளாண் துறையில் இளங்கலை படிப்பு 4 ஆண்டு தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்பாகும்.. தொழில்முறை பாடமாக இருப்பதால், வேளாண் துறையில் பி.எட் செய்வது கட்டாயமில்லை. உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஸ்கரில் பேராசிரியர், விரிவுரையாளர் ஆட்சேர்ப்பில் பி.எட் பட்டம் கட்டாயம் இல்லை. எனவே, இந்த விதியை ராஜஸ்தான் மாநிலமும் நீக்க வேண்டும். ஆர்.பி.எஸ்.சியில் இருந்து விதி நீக்கப்படாவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட 290 விண்ணப்பதாரர்கள் தகுதி இழப்பார்கள்.எனவே, வேலையற்றோரின் நலன்களுக்காக அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டும்’.
மக்களின் கோரிக்கைக்கு நீதிமன்றம் செவிசாய்த்தாலும், பிறகு அரசு அதற்கு ஏற்றாற் போல சில விதிமுறைகளை மாற்றினால் தான் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
தொடர்புடைய செய்தி | விவசாயிகளுக்கு மலிவான கடன்.. இதுவரை 1.5 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR