உடல் உறவுக்கு பின் திருமணத்துக்கு மறுப்பது மோசடியாகாது: மும்பை உயர்நீதிமன்றம்
25 ஆண்டு கால வழக்கு ஒன்றில், `உடல் உறவுக்கு பின் திருமணம் செய்ய மறுப்பது மோசடியாகாது` என, மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் பால்கரைச் சேர்ந்த ஒரு பெண், 1996ஆம் ஆண்டில், ஒருவர் நன்கு பழகி திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து, உடலுறவும் வைத்துக் கொண்ட பின் திருமணம் செய்ய மறுக்கிறார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (FIR) அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (கற்பழிப்பு) மற்றும் 417 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் மறுத்து வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து மூன்று ஆண்டுகள் விசாரணை செய்த மாவட்ட நீதிமன்றம், அந்த நபர் மோசடி செய்ததாக கூறி, ஓராண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் (Bombay High Court), குறிப்பிட்ட நபர், ஆசை வார்த்தை கூறி, உடல் உறவுக்கு இணங்க வைத்ததாக நிரூபிக்கப்படவில்லை என கூறியுள்ளது. இருவரும் நன்கு பழக்கமானவர்கள் என்ற நிலையில், உடல் உறவும் வைத்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்வதற்கு அந்த ஆண் மறுத்துள்ளதால், சம்பந்தப்பட்ட பெண் மோசடி வழக்கு தாக்கல் செய்துள்ளார். என்றாலும், திருமணம் செய்வதாக உறுதி அளித்து, ஆசை வார்த்தை கூறி உடலுறவு வைத்துக் கொண்டார் என்பது நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ALSO READ | மேலாடையை நீக்காமல் தொடுவதும் பாலியல் வன்முறை தான்: உச்ச உச்ச நீதிமன்றம்
"ஆரம்பத்திலிருந்தே, குற்றம் சாட்டப்பட்டவர் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதைக் குறிப்பிடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 90-வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ளபடி, அவர் ஆசை வார்த்தைகளில் மயங்கி அந்த பெண் உடல் உறவுக்கு சம்மதித்துள்ளார் என்பதை நிரூபிக்க ஆதாரம் இல்லாத நிலையில், IPC இன் பிரிவு 417 இன் கீழ், திருமணம் செய்ய மறுப்பது குற்றமாகாது" என்று நீதிபதி பிரபுதேசாய் தீர்ப்பளித்தார்.
பரஸ்பர சம்மதத்துடன் உடல் உறவு கொண்ட நிலையில், இருவரும் மூன்று ஆண்டுகளில் பலமுறை உடலுறவு வைத்து உள்ளனர். அதே சமயம் அவர் ஆசை வார்த்தைகளில் மயங்கி திருமணம் செய்து கொள்வார் என நம்பி உடலுறவு கொண்டதாக, அந்த பெண் எங்கேயும் கூறவில்லை. இந்நிலையில், திருமணம் செய்ய மறுத்தது ஒரு குற்றமாகாது என மும்பை உயர் நீதி மன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்முறை ஆகாது: மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR