ஆணாதிக்கம் வெறுக்கப்பட வேண்டியது: கேரள உயர் நீதிமன்றத்தை கூற வைத்த ரெஹானா ஃபாத்திமா யார்?
Women Activist Rehana Fathima: மகனாக இருந்தாலும் சிறுவன் முன்பு அரை நிர்வாணமாக இருந்தது தவறு என குற்றம் சாட்டப்பட்ட ரெஹானா பாத்தீமா செய்தது தவறில்லை என கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ரெஹானா பாத்திமா வழக்கை விசாரித்த கேரள மாநில உயர் நீதிமன்றம், `பாதுகாப்பு என்ற போர்வையில் வெளிப்படும் ஆணாதிக்கம் வெறுக்கப்பட வேண்டியது; `பெண்களின் ஆடையில்லாத உடலை எல்லா நேரத்திலும் ஆபாசமாகப் பார்க்க முடியாது' என தனது தீர்ப்பில் அதிரடியாக தெரிவித்துள்ளது. அரை நிர்வாண உடம்பில் தன் மகனை ஓவியம் வரைய வைத்தார். பின்னர் அந்த வீடியோவை `body art politics' என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரப்பினார்.
`மகனாக இருந்தாலும் சிறுவன் முன்பு அரை நிர்வாணமாக அவர் வெளிப்பட்டது தவறு’ என அந்த வீடியோ சர்ச்சையானது. அதன் பிறகு, கேரள மாநிலத்தில் பா காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் ரெஹானா பத்திமா மீது போக்ஸோ, ஐடி ஆக்ட் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரெஹானாவின் லேப்டாப், பெயின்டிங் உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
'அரை நிர்வாணம்' வழக்கு என்ன?
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, ரெஹானா கைது செய்யப்பட்டார். கேரள உயர் நீதிமன்றத்தில் பாத்திமா தாக்கல் செய்த மேல்முறையீட்டில், வீடியோவில் உள்ள உடல் ஓவியங்கள், பெண்ணின் உடல் மீதான சமூகத்தின் இயல்புநிலைக் கண்ணோட்டத்திற்கு எதிரான அரசியல் அறிக்கையாகும் என்று வலியுறுத்தினார்.
ஆண் பெண் - உடல் ரீதியிலான வித்தியாசம்
சமூகத்தில், சக மனிதர்களாக இருந்தபோதிலும், பெண்ணின் உடலும், ஆணின் உடலும் வித்தியாசமாக நடத்தப்படுகிறது என்றும், புறநிலை அல்லது பாலியல் ரீதியாக ஆண்களின் உடல் பார்க்கப்படுவது இல்லை என்று ரெஹானா ஃபாத்தீமா உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
மேலும் படிக்க - மக்கள் பசிபோக்கும் விஜய் மக்கள் இயக்கம்.. தமிழ்நாடு முழுக்க பசியாறிய ஏழை மக்கள்
ரெஹானா ஃபாத்தீமா மீது போக்சோ வழக்கு
இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ரெஹானா ஃபாத்தீமா, பிறகு ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ரெஹானா ஃபாத்திமா, விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணை நீதிமன்றத்தில், வழக்கை ரத்து செய்யக் கோரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் ரெஹானா பாத்திமா மனுத்தாக்கல் செய்தார்.
கேரள உயர் நீதிமன்றத்தில் ரெஹானா பாத்திமா மனுத்தாக்கல்
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், `பெண்களின் ஆடையில்லாத உடலை எல்லா நேரத்திலும் ஆபாசமாகப் பார்க்க முடியாது’ எனக் கூறியதுடன், ரஹானா பாத்திமா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் படிக்க | சபரிமலையில் ரெஹானா ஃபாத்தீமா
இதற்கு முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இருமுடிகட்டி நுழைய முயன்று சர்ச்சையை ஏற்படுத்திய ரெஹானா ஃபாத்திமா மீது, தனது குழந்தைகளை வைத்து, அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்து அதை வீடியோவா வெளியிட்டதால், குழந்தைகள் பாலியல்வன்முறை தடுப்புச்சட்டமான போக்ஸோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
கட்டாய ஓய்வு
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ரெஹானா ஃபாத்தீமா, சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், நிறுவனம் அவருக்கு கட்டாய ஓய்வு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாணமும் ஆபாசமும் ஒன்றல்ல. ஆடையில்லாத உடல் சாதாரணமானதுதான் என மகனுக்கு அறிவுறுத்துவதற்காக, தனது உடலை ஒரு தாய் பயன்படுத்தியது தவறு அல்ல. நாட்டில் எவ்வளவோ அரை நிர்வாண ஓவியங்களும் சிற்பங்களும் உள்ளன. அவை தெய்வீகமாகப் பார்க்கப்படுகின்றன என்று கூறிய கேரள உயர் நீதிமன்றம், உடலின் பெயரால் பெண்ணை மிரட்டுவதும், தனிமைப்படுத்துவதும், விசாரணை செய்வதும் சமூகத்தின் இரட்டை நிலையை இது அம்பலப்படுத்துவதாக உள்ளது என்று கவலை தெரிவித்தது.
யார் இந்த ரெஹானா ஃபாத்தீமா?
முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தனது பி.காம் மற்றும் எம்.சி.ஏ பட்டங்களைத் தொடர்ந்தார். 2014 ஆம் ஆண்டில், கொச்சியில் நடந்த சர்ச்சைக்குரிய ‘கிஸ் ஆஃப் லவ்’ போராட்டத்தில் அவர் தனது கூட்டாளியான மனோஜ் கே ஸ்ரீதருடன் இணைந்து கலந்துக் கொண்ட பிறகு அவர் பிரபலமானார்.
மேலும் படிக்க - தலித் மக்களை டார்கெட் செய்யும் விஜய்... பூவை ஜெகன் மூர்த்தி விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ