கவர்ச்சிகரமான ஜியோ சேவை இன்று அறிமுகம்
ரிலையன்ஸ் தனது கவர்ச்சிகரமான ஜியோ சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. "டேட்டா" அல்லது "வாய்ஸ் கால்" இரண்டில் ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துவதாக முகேஷ் அம்பானி மும்பையில் அறிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில்:- தற்போது வாழ்க்கை டிஜிட்டல் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் இந்தியாவும், இந்தியர்களும் டிஜிட்டல் பயன்பாட்டில் பின்தங்கிவிடக்கூடாது. இந்தியாவின் டிஜிட்டல் தரவரிசையை உயர்த்தும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமாகியுள்ளது. இன்றைக்கு மொபைல் இண்டர்நெட் என்பது உயிர்மூச்சாக மாறிவிட்டது. ஜியோ என்பது வர்த்தகத்தை தாண்டிய ஒன்றாகும். ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதை எங்களது இலக்காக கொண்டுள்ளோம்.
தற்போது ரிலையன்ஸில் ஒரு நிமிடத்திற்கு கால் கட்டணம் 65 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முற்றிலும் இலவசமாக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக 1GB-4G டேட்டா -விற்கு ரூ.50 என்ற வீதத்தில் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும். இது உலகிலேயே மிகக் குறைந்த டேட்டா கட்டணம் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோ விவரம்:-
ரூ.149, ரூ.499, ரூ.999, ரூ.1,499, ரூ.2,499, ரூ.3,999 மற்றும் ரூ.4,999 என விலைகளின் அடிப்படையில் 7 திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது.