குடியரசு தின கொண்டாட்டம் இனி ஜனவரி 23ம் தேதியில் தொடங்கும்: மத்திய அரசு அறிவிப்பு
குடியரசு தின விழாவுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையும் கொண்டாடும் வகையில் மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், இது தொடர்பான கொண்டாட்டங்களை மத்திய அரசு ஜனவரி 24ம் தேதியே தொடங்கி விடும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு முதல் இதில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அதாவது, குடியரசு தின விழாவுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையும் கொண்டாடும் வகையில் மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
தலைநகர் தில்லியில் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறும். இதில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், வெளிநாட்டு தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கபப்ட்டு கலந்து கொள்வார்கள்.
ALSO READ | New Wage Code: இனி 30 நிமிட கூடுதல் வேலைக்கும் ஓவர் டைம் கிடைக்கும்!
இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் தேதி மாற்றப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு ஜனவரி 24ம் தேதிக்கு பதிலாக, ஒரு நாள் முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு, ஊதிய உயர்வுக்கு தயாராகும் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR