நவம்பர் 19 கூடுகிறது ரிசர்வ் வங்கி மத்திய குழு கூட்டம்!
ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேல் தலைமையில் வரும் நவம்பர் 19ம் தேதி மத்திய குழு கூட உள்ளதாக தகவ வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேல் தலைமையில் வரும் நவம்பர் 19ம் தேதி மத்திய குழு கூட உள்ளதாக தகவ வெளியாகியுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் விரால் ஆச்சார்யா மத்திய வங்கிகளின் தன்னாட்சி நிர்வாகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிவித்தார். இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இடையே பிரச்னை உருவாக தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7-ஐ பயன்படுத்தி ரிசர்வ் வங்கியுடன் நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய போவதாக தகவல்கள் செய்திகள் வெளியாகின. இவை ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் இடையிலான பிரச்னையை வலுப்படுத்தியது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேல் தலைமையில், ஆர்.பி.ஐ மத்திய குழுவின் கூட்டம் வரும் நவம்பர் 19ம் தேதி மும்பையில் கூட உள்ளது. இதில் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் உட்பட 18 பேர் பங்கேற்க உள்ளனர்.