வரலாற்றை திருத்தி எழுதுங்கள்... நாங்க பாத்துக்கிறோம் - அமித் ஷா அதிரடி
வரலாற்றை சீர்செய்ய மாணவர்கள், பேராசிரியர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டால் அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அஹோம் தளபதி லச்சித் பர்புகான் என்பவரின் 400ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்ட விழா மூன்று நாள்களுக்கு டெல்லியில் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்நிகழ்ச்சியை அசாம் மாநில அரசு ஏற்பாட செய்துள்ளது. இதில், இரண்டாம் நாளான நேற்று, சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில்,"நான் வரலாறு பாடத்தை படித்த மாணவன். நம்முடைய வரலாறு சரியாக பதிவுசெய்யப்படவில்லை என நான் கேள்விப்பட்டுள்ளேன். அந்த பேச்சு சரியாகவும் இருக்கலாம், நாம் அதை திருத்தம் செய்ய வேண்டும். நான் வரலாற்றாசிரியர்களை நோக்கி கேட்கிறேன், யார் உங்களை வரலாற்றை முறையாகவும், அற்புதமாகவும் படைக்க தடுக்கிறார்கள்.
தற்போதைய நமது வரலாறுகள் சரியாக தெரிவிக்கப்படவில்லை என்ற வாதத்தை இந்நிகழ்ச்சியில் அமர்ந்திருக்கும், மாணவர்களும், பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஒழித்து கட்ட வேண்டும். இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை 30 சாம்ராஜ்யங்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுள்ளன, நமது நாட்டு விடுதலைக்கு 300க்கும் மேற்பட்ட ஆளுமைகள் போராடியுள்ளனர், இவையனைத்து குறித்தும் ஆராய்ச்சி செய்யுங்கள்.
போதுமான உண்மைகள் எழுதப்பட்டுவிட்டால், பொய் வரலாறு என்ற பேச்சே ஒழிந்து போகும். இந்த ஆராய்ச்சி அனைத்திற்கும் மத்திய அரசு உறுதுணையாக இறுக்கும். முன்னோக்கி வாருங்கள், ஆராய்ச்சி செய்யுங்கள், வரலாற்றை திருத்தி எழுதுங்கள். அப்போதுதான் நாம் வருங்கால தலைமுறையினரை கூட ஊக்கமளிக்க இயலும்.
மக்களுக்கு பெருமளவில் பலனளிக்கும் வகையில் தற்போது, வரலாற்றையும் திரும்பிபார்ககும் நேரம் வந்துவிட்டது. முகலாயர்களை கடுமையாக எதிர்த்து, அவர்களின் படையெடுப்பை தடுத்ததில் லச்சித் பெரும்பங்காற்றினார். சரியாகட் போரில் அவருக்கு உடல்நலம் குன்றியிருந்தாலும், கடுமையாக போரிட்டு அதில் வெற்றி பெற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மற்றும் பிற இந்திய பகுதிகளுக்கும் இருந்த இடைவெளியை நீக்கி, அதனை இணைத்துள்ளார். அரசின் நடவடிக்கையால், வடகிழக்கில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
லச்சித் குறித்து புத்தகங்களை குறைந்தபட்சம் 10 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு கோரிக்கை விடுகிறேன். அப்போதுதான் நாட்டில் உள்ள மக்கள் லச்சித்தின் வீரம் குறித்து தெரிந்துகொள்ள முடியும்" என்றார்.
நவ. 24ஆம் லச்சித்தை நினைவுக்கூறும் வகையில், லச்சித் தினம் கடைபிடிக்கப்படுகிறது. லச்சித் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் நிகழ்ச்சியில் அமித் ஷா வெளியிட்டார்.
மேலும் படிக்க | 500 கிலோ கஞ்சாவை தின்று ஏப்பம் விட்ட எலிகள் - போலீஸ் வினோத விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ