ஆர்.கே.நகர் தொகுதியில், இந்த முறை தேர்தல் ஆணையம் கடுமையாக முயற்சித்தும் பணப்பட்டுவாடாவை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்று கொண்ட ஓம்பிரகாஷ் ராவத் கூறி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னால் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஏ.கே. ஜோதி நேற்று முன்தினத்தோடு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நேற்று பொறுப்பேற்றார்.


இந்நிலையில், செய்தியாளர்களை சந்திப்பில் ஓம் பிரகாஷ் கூறியது பின்வருமாறு,


ஆர்.கே.நகர் தேர்தலில் இந்த முறை குறைவான பணத்தையே தேர்தல் ஆணையத்தால் பிடிக்க முடிந்தது.  தமிழகத்தில் பணப்பட்டுவாடாவுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்வோம்.


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்சபை தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்தலாம். இதன்மூலம் தேர்தல் செலவை மிச்சப்படுத்த முடியும்.


தமிழ்நாட்டில் இனி பணப்பட்டுவாடாவைத் தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்.விரல் ரேகை பதிவு அடிப்படையில் வாக்களிக்க முறையை அமல்படுத்த வேண்டும். இதனால் போலி வாக்காளர் கண்டறிய முடியும். காண முடியும்.


இலவசப் பொருட்கள், பணம் வழங்குவது போன்றவற்றைத் தடுக்க முயன்றதில் 23 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறிய அவர், கடந்த முறை 89 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.


1977-ம் ஆண்டு மத்திய பிரதேசப் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராவத் தற்போது தேர்தல் ஆணையராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்கள் ஓம் பிரகாஷ் ராவத் தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.