நாட்டில் ரோஹிங்கியா மக்களை அனுமதித்தால் 10 காஷ்மீர் உருவாகும் -பாபா ராம்தேவ்
ரோஹிங்கியா மக்களை இந்தியாவில் அனுமதித்தால் 10 காஷ்மீர் மாநிலம் உருவாகி விடும் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
நமது நாட்டில் ரோஹிங்கியா மக்கள் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் சுமார் 40,000 ரோஹிங்கியா மக்கள் தங்கியுள்ளனர். அவர்களை குறித்து தகவல்களை சேகரித்து அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
சமீபத்தில், அசாம் மாநிலம் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியளை வெளியிட்டது. இந்த வரைவு பட்டியலில் சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. அவர்கள் மீண்டும் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கமாறு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இந்நிலையில் குடியுரிமை இல்லாதவர்கள் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார்களா? என அச்சம் மக்கள் மத்தியில் ஏற்ப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் புயலைக் கிளப்பியது. அவைகள் பல ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இந்தியாவுக்கு சட்ட விரோத இடம் பெயரும் அகதிகளை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பதஞ்சலி நிறுவனம் தலைவர் பாபா ராம்தேவ். அவர் கூறியதாவது:-
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்று முதல் நான்கு கோடி பேர் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கி உள்ளனர். தற்போது ரோஹிங்கியாவை சேர்ந்தவர்களும் நமது நாட்டில் வந்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது. இந்த ரோஹிங்கியாவை சேர்ந்தவர்க நமது நாட்டில் தங்கி விட்டால், தற்போது உள்ள காஷ்மீர் மாநிலத்தை போல இன்னும் 10 காஷ்மீர் மாநிலம் உருவாகி விடும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.