ஆக.,28 வரை கேரளாவுக்கு ரூ.738 கோடி நிதி வந்துள்ளது -கேரளா CM
பேரிடர் நிவாரண நிதியாக ஆக.28 வரை கேரளாவுக்கு ரூ.738 கோடி வந்துள்ளதாக கேரள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் தகவல்....!
பேரிடர் நிவாரண நிதியாக ஆக.28 வரை கேரளாவுக்கு ரூ.738 கோடி வந்துள்ளதாக கேரள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் தகவல்....!
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.
இதை தொடர்ந்து, இன்று வெள்ள பாதிப்பு தொடர்பான கேரள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூடடத்தில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு ஆலோசனைகளை கலந்தாலோசித்து வருகின்றனர். இக்கூட்டத்தில் கேரளா முதலவர் பினராயி விஜயன் பேசுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு பேரிடர் நிவாரண நிதியாக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை கேரளாவுக்கு சுமார் ரூ.738 கோடி வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.