வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள ‘மை’யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வாக்களித்ததை உறுதி செய்ததை காட்டும் மிகச் சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக ரூ.7ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது சிறந்த செல்பிக்கு ரூ.3 ஆயிரம் பரிசும், 3வது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.