சுதந்திர தினம் 2020: ரஷ்யா, லாட்வியா, நேபாளம் ஆகிய நாடுகள் வாழ்த்து..!!
இந்தியாவின் 74வது சுதந்திர தினமான இன்று, ரஷ்யா, லாட்வியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளது.
இந்தியாவின் 74வது சுதந்திர தினமான இன்று, ரஷ்யா, லாட்வியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளது.
ரஷ்யா தனது ட்வீட் செய்தியில், இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கும், ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், விளாடிவோஸ்டோக்கில் உள்ள துணை தூதரகத்தில் உள்ளவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளது.
லாட்வியாவும் தனது ட்வீட் செய்தியில், இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளது.
முன்னதாக நேபாளம் இஸ்ரேல், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டன.