இந்தியாவில் Sputnik Lite தடுப்பூசி எப்போது; ரஷ்யா கூறியது என்ன
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி (Sputnik V) கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு, இந்தியாவில் 2021 ஏப்ரல் 12, அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதுடில்லி: இந்தியாவில் மேட் இன் இந்தியா தடுப்பூசிகளான, கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி (Sputnik V) கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு, இந்தியாவில் 2021 ஏப்ரல் 12, அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன் இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடும் பணியும் தொடங்கிவிட்டது
இந்நிலையில், ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியான 'ஸ்பூட்னிக் லைட்' (Sputnik Lite) விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்று ரஷ்ய தூதர் நிகோலே குடாஷேவ் (Nikolay Kudashev) ஞாயிற்றுக்கிழமை (மே 16, 2021) தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் இரண்டாவது தொகுதி ஸ்புட்னிக் வி (Sputnik V) கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வந்திறங்கியுள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இந்தியாவில் ஸ்புட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசி உற்பத்தி, படிப்படியாக ஆண்டுக்கு 85 கோடி என்ற அளவிற்கு அதிகரிக்கும் என்று ரஷ்யா எதிர்பார்க்கிறது எனவும் ரஷ்ய தூதர் கூறினார்.
"தொற்றுநோயைத் தடுக்க இந்தியாவுடனான எங்கள் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.
"COVID-19 புதிய திரிபுகளுக்கு எதிராகவும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்று ரஷ்ய நிபுணர்கள் கூறியுள்ளனர்" என்று குடாஷேவ் கூறினார்.
ALSO READ | Sputnik V தடுப்பூசியின் விலை குறித்து Dr Reddy's வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR