புதுடெல்லி: ரஷ்யா உக்ரைன் இடையில் இருக்கும் பதட்டம் ஏற்கனவே உலக மக்களை மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில், தற்போது ரஷ்யா உக்ரைன் மீது முறையான தாக்குதலை தொடங்கிவிட்ட நிலையில், அது உலக நாடுகளில் பல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யா தாக்குதலின் தாக்கம் இன்று காலை முதலே இந்திய பங்குச்சந்தையில் தெரியத் தொடங்கிவிட்டது.  ரஷ்யா உக்ரைன் பதட்டங்களுக்கு இடையில், இந்திய முதலீட்டாளர்களின் அச்சம் அதிகரித்தது. இதன் காரணமாக ஏற்பட்ட பதட்டத்தால், இந்திய சந்தைகள் இன்று வீழ்ச்சியடைந்த நிலையில் துவங்கின. 


இன்று வர்த்தகத்தின் துவக்கத்தில், பிஎஸ்இ சென்செக்ஸ் 2.70 சதவீதம் அதாவது 1546.47 புள்ளிகள் சரிந்து 55,685.59 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 2.70 சதவீதம் அதாவது 460.40 புள்ளிகள் சரிந்து 16,602.85 ஆகவும் இருந்தது. 


மேலும் படிக்க | LIVE: Russia vs Ukraine War Live Updates: போரைத் தொடங்கியது ரஷ்யா!


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழனன்று உக்ரைனில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். மேலும் மற்ற நாடுகள் ரஷ்ய நடவடிக்கையில் தலையிட்டாலோ அதற்கு முயற்சி செய்தாலோ, இதுவரை பார்த்திராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் பிற நாடுகளை எச்சரித்தார். 


கிழக்கு உக்ரைனில் உள்ள குடிமக்களைப் பாதுகாப்பதற்காக இந்தத் தாக்குதல் தேவை என்று ரஷ்ய அதிபர் புதின் கூறினார்.  ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால், அதை நியாயப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட சாக்குகளை புதின் கூறுவார் என அமெரிக்கா ஏற்கனவே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில், தொடர்ந்து ஆறாவது அமர்வாக, புதன்கிழமையும் இழப்பே நீடித்தது. சென்செக்ஸ் 0.12 சதவீதம் அதாவது 68.62 புள்ளிகள் சரிந்து 57,232.06 ஆகவும், நிஃப்டி 0.12 சதவீதம் அதாவது 28.95 புள்ளிகள் சரிந்து 17,063.25 ஆகவும் முடிந்தன. 


மேலும் படிக்க | Russia Ukraine Crisis: 'சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR