இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகை தரவுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார். இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை தரும் அவர், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். 


இந்தப் பயணத்தின்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும். ஏனெனில், இது ரஷியாவின் அதிநவீன ஏவுகணையாகும். 
 
மேலும் இந்தியாவுக்கு வருகை தரும் புதின் இன்று மாலை சுமார் 6:30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன.