பாகிஸ்தானில் நடக்கும் சார்க் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்லாமாபாத் சென்றடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமான நிலையத்தில் அதிகாரிகள் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர். பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் செல்லும் முதல் இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.


ராஜ்நாத்சிங் பாகிஸ்தான் வருகை தந்தால் நாடு தழுவிய அளவில் போரட்டம் நடத்தப்படும் என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளதால்,  அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.