Sabarimala: மாசி மாத பூஜைகளுக்காக 12ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும்
மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும், தினமும் 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதி
சபரிமலை, மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 12ம் தேதி திறக்கப்பட உள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, மாசி மாத பூஜைகளுக்காக வரும் 12ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார்.
12ம் தேதி மாலை திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்று விசேஷ பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். 13ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை துவங்கி வைப்பார்.
அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். வரும் 17ம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும். தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை முடிவு 'நெகடிவ்' சான்றிதழ் மற்றும் முன்பதிவு கூப்பனுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு வர வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ALSO READ | சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள்!
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR