சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள்!

மகர சங்கராந்தி நாளில், சூரியன் அஸ்தமித்த பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறையும் அந்த மகர விளக்கு காட்சியை காண, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 14, 2022, 07:59 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள்!

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா தை முதல்நாள் கொண்டாடப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், மகர விளக்கு பூஜை கோலகலமாக நடைபெற்ற நிலையில், அங்கு பொன்னம்பல மேட்டில் ஜோடி வடிவத்தில் காட்சி அளித்த சுவாமி ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம்  விண்ணை பிளந்தது. 

மகர சங்கராந்தி நாளில் (Makara Sankaranthi), சூரியன் அஸ்தமித்த பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறையும் அந்த மகர விளக்கு காட்சியை காண, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 

சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பந்தள அரச குடும்பத்தினர் கொண்டு வரும் நெய் நிரப்பிய தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு, அந்த நெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், வானத்தில் மகர நட்சத்திரம் உதிக்கும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட, மகாராஜா வழங்கிய தங்க நகைகளை, அந்த திரு ஆபரணங்களை பந்தளத்தில் இருந்து தலையில் சுமந்து கொண்டு வரப்பட்டு,  திரு ஆபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.

இந்நிலையில், சூரிய அஸ்தமானத்திற்கு பிறகு பொன்னம்பல மேட்டில் 3 முறை, ஐயப்பன் ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மகர சங்கராந்தி தினத்தன்று, ஐயப்பன் ஜோதியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறான் என்பது ஐதீகம்.

மகர ஜோதியைக் காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். ஆனால், கொரோனா பரவல்  முன்னெச்சரிக்கை காரணமாக தற்போது, 65 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ஊரடங்கு: கோவையில் முழு அடைப்பு, வெறிச்சோடிய சாலைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ALSO READ | தமிழகத்தில் பொங்கும் ‘பொங்கலோ பொங்கல்’; மற்ற மாநிலங்களில் 'மகரசங்கராந்தி’..!!

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News