பிரபல பேட்மிண்டன் வீரரும் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால் புதன்கிழமை (ஜனவரி 29) பாஜகவில் இணைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

29 வயதான சாய்னா நேவால், இதுவரையில் 24 சர்வதேச விருதுகளை பேட்மிண்டன் விளையாட்டில் வென்றுள்ளார். பெண்கள் ஒன்றையர் பேட்மிண்டன் போட்டியில், லண்டனில் கடந்த 2012 ஆம்  ஆண்டு நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு, சாய்னா நேவால், பத்ம பூஷண் விருதை பெற்றிருந்ததார்.


இந்நிலையில் தற்போது பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியது. அந்த வகையில் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைத்துள்ளார்.


பாஜகவில் இணைத்த பின்னர் பேசிய சாய்னா நேவால்.,


இன்று ஒரு நல்ல நாள், இன்று நான் நாட்டிற்காக உழைத்த ஒரு கட்சியில் சேர்ந்துள்ளேன், நாட்டிற்காக மிகவும் கடினமாக உழைக்கும் மோடி ஜியுடன் என்னால் எதுவும் செய்ய முடிந்தால், அது எனக்கு நல்லது. இவ்வாறு தெரிவித்தார்.