பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 1998-ம் ஆண்டு இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.


இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான், ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.  இந்த முறையீட்டை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன், தண்டனையை நிறுத்தி வைத்தது, சல்மான்கான் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார். 


இந்த நிலையில் இன்று விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் சல்மான்கான் மீது தொடரபட்ட 2 வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்ப்பட்டார்.