76 குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோருடன் சேர்த்து வைத்த பெண் போலீஸ் அதிகாரிக்கு Salute
பெண் போலீஸ் அதிகாரியின் மகத்தான சாதனையைக் கண்டு காவல்துறையே அவருக்கு பதவி உயர்வு கொடுத்து கெளரவித்துள்ளது. இது வழக்கமான பதவி உயர்வு அல்ல, சிறப்பாக பணி புரிந்ததற்காக வழக்கத்திற்கு மாறான பதவி உயர்வாக out-of-turn promotion கொடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: பெண் போலீஸ் அதிகாரியின் மகத்தான சாதனையைக் கண்டு காவல்துறையே அவருக்கு பதவி உயர்வு கொடுத்து கெளரவித்துள்ளது. இது வழக்கமான பதவி உயர்வு அல்ல, சிறப்பாக பணி புரிந்ததற்காக வழக்கத்திற்கு மாறான பதவி உயர்வாக out-of-turn promotion கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள சமய்பூர் பத்லி காவல் நிலையத்தில் (PS Samaypur Badali) பணிபுரிகிறார் சீமா டாக்கா (Seema Dhaka). சிறப்பாக பணியாற்றியதற்காக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் காவலர் சீமா டாக்கா தான்.
டெல்லி காவல்துறையின் தலைமை கான்ஸ்டபிள் சீமா டாக்கா புதிய ஊக்கத் திட்டத்தின் கீழ் (new incentive scheme) மூன்று மாதங்களுக்குள் முன்கூட்டியே பதவி உயர்வு பெற்ற முதல் போலீஸ்காரர் ஆனார். காணாமல் போன 76 குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்துடன் சேர்த்து வைத்ததற்காக சீமா டாக்காவுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டது.
பதவி உயர்வு என்பது ஒருபுறம் இருந்தாலும், 76 குடும்பங்களின் மகிழ்ச்சியும், அவர்களின் வாழ்த்தும் சீமா டாக்காவுக்கு மிகப் பெரிய பாராட்டுப் பத்திரமாக இருக்கும்.
டெல்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வடக்கு டெல்லியில் உள்ள சமய்பூர் பத்லி காவல் நிலையத்தில் (PS Samaypur Badali) பணிபுரியும் சீமா டாக்காவுக்கு out-of-turn promotion என்ற வகையில் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆகஸ்ட் 5 ம் தேதி, போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா, new incentive scheme ஒன்றை அறிவித்தார். துரிதமாக பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதாகவும் அப்போது உறுதியளிக்கப்பட்டது.
எஸ்.என். ஸ்ரீவாஸ்தவின் அறிவிப்பின்படி, எந்தவொரு கான்ஸ்டபிள் அல்லது ஹெட் கான்ஸ்டபிள் ஒரு வருடத்திற்குள் 14 வயதிற்கு உட்பட்ட குறைந்தது 50 குழந்தைகளைக் கண்டுபிடித்தால், அவருக்கு உடனடியாக பின்னர், அவருக்கு out-of-turn promotion என்ற வகையில் பதவி உயர்வு வழங்கப்படும்.
சீமா டாக்கா காணாமல் போன 76 குழந்தைகளைக் கண்டுபிடித்துள்ளதை அடுத்து, out-of-turn promotion என்று போலீஸ் கமிஷனர் அறிவித்தவாறு தற்போது பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
சீமா கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளில் 56 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். காணாமல் போன இந்த குழந்தைகள் டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட புகார்களை விசாரித்து, இந்த 76 குழந்தைகளையும் சீமா கண்டுபிடித்துள்ளார்.
வெறும் இரண்டரை மாதங்களில் நேர்மை மற்றும் கடின உழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் தலைமை கான்ஸ்டபிள் சீமா டாக்கா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி, காணாமல் போன 5412 குழந்தைகளில் 3336 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதாவது, காணாமல் போன குழந்தைகளில் 62 சதவீதத்தை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர் என்பது நல்ல செய்தியாக வந்திருக்கிறது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR