குருகிராம்: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 82. இந்தத் தகவலை சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் அவரின் மகனுமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.முலாயம் சிங் உடல்நிலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்ததையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளி்க்கப்பட்டு வந்தது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முலாயம் சிங் யாதவ் கடந்த வாரமாக, ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உடல்நல கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் முலாயம் சிங் யாதவ் காலமானார்.


மேலும் படிக்க | குடும்ப வன்முறையால் 36 ஆண்டுகள் சங்கிலிச் சிறையில் அடைபட்ட பெண்


முலாயம் சிங் யாதவின் இரண்டவது மனைவி சாதனா குப்தா சில மாதங்களுக்கு முன்னதாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் நீண்ட காலமாக உடல் நல கோளாறால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, கடந்த ஜூலை மாதம் 9ம் தேதியன்று குருகிராமில் காலமானார். 


சாதானா குப்தாவுக்கு பிரதீக் யாதவ் என்ற மகன் உண்டு. அவரது மனைவி அபர்ணா யாதவ் பாஜகவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உலக அளவில் பதிவு செய்த கஷ்மீரி பெண்கள்


முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி கட்சியை நிறுவினார். மூத்த இந்திய அரசியல்வாதியான முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர், மாநிலத்தில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். 1989 முதல் 91 வரை முதல் முறை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட அவர், பின்னர் 1993 முதல் 95 மற்றும் 2003 முதல் 2007 என மூன்று முறை உத்த்ரப் பிரதேச மாநில முதல்வராக இருந்துள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தையான முலாயம் சிங் யாதவ், தந்தையின் அரசியல் வாரிசாக உருவெடுத்துள்ளார். அசம்கர் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.



1996 முதல் 1998 வரை மத்திய அமைச்சராக பணியாற்றிய மறைதிரு முலயாம் சிங் யாதவ். உத்தரப் பிரதேச சட்டசபையில் 7 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த முலாயம் சிங் யாதவ், தற்போது, ஆறாவது முறையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றி வந்தார்.  


மேலும் படிக்க | நயன்தாராவின் குழந்தைகள் உயிர் மற்றும் உலகம்: புகைப்படங்கள் வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ