முஸ்லிம்கள் தான் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறார்கள்! அசாதுதின் ஓவைசி

Musilm Population: முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2022, 02:06 PM IST
  • முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதம் குறைந்துவிட்டது
  • அசாதுதின் ஓவைசி கருத்தின் பின்னணி
  • இஸ்லாமியர்கள் அதிகம் காண்டம் பயன்படுத்துவது உண்மையா?
முஸ்லிம்கள் தான் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறார்கள்! அசாதுதின் ஓவைசி title=

புதுடெல்லி: முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். தேவையில்லாத டென்ஷன் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று கூறிய அவர், எங்கள் மக்கள் தொகை குறைகிறது என்று கூறுகிறார். முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் அதிக இடைவெளி விடும் விஷயத்தில் இஸ்லாமியர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். 'ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர் யார்? முஸ்லிம்கள் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால், இது குறித்து மோகன் பகவத் பேச மாட்டார் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

கருவுறுதல் விகிதம் இரண்டு சதவீதமாக குறைந்துள்ளது என்று கூறிய ஓவைசி, முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதம் மிகவும் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் மதரஸாக்கள் குறித்த கணக்கெடுப்புக்கு பதிலளித்தபோது ஓவைசி தெரிவித்தார்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

நான் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மதரஸாக்கள் மற்றும் வக்பு வாரியம் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து யாரும் எதுவும் கூற மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் மத ஏற்றத்தாழ்வு குறித்து பேசும்போது, அசாதுதீன் ஓவைசி இவ்வாறு தெரிவித்துள்ளார். விஜயதசமி தொடர்பாக பேசியபோது, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பகவத், மக்கள் தொகைப் பிரச்சினையை எழுப்பினார். மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு பிரச்சினையை புறக்கணிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க | Astro: 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகா திசை; சனியின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!

மோகன் பகவத் என்ன சொன்னார்?
'75 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இதை அனுபவித்தோம், 21 ஆம் நூற்றாண்டில் உலகில் புதிதாக உருவாகிய மூன்று சுதந்திர நாடுகளான கிழக்கு திமோர், தெற்கு சூடான் மற்றும் கொசோவா உட்பட, இந்தோனேசியா, சூடான் மற்றும் செர்பியாவின் ஒரு பகுதி மக்கள் தொகை மோசமாக ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது.'

ஒரு நாட்டில் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு ஏற்படும் போதெல்லாம், அந்த நாட்டின் புவியியல் எல்லைகளும் மாறும். பிறப்பு விகிதத்தில் சமத்துவமின்மை ஏற்படும்போது, பேராசை, கட்டாய மதமாற்றம் மற்றும் நாட்டில் ஊடுருவல் ஆகியவற்றுக்கு காரணம் மக்கள் தொகையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு ஆகும் என்று மோகன் பாக்வத் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!

மேலும் படிக்க | குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்; 6 பாகிஸ்தானியர் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News