ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சென்னைக்கு பணியிட மாற்றம்
Aryan khan case: நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்த முன்னாள் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொகுசு கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த விருந்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து அந்த சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்யன் கான் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை தொடங்கிய உடனேயே, வழக்கின் விசாரணை அதிகாரி சமீர் வான்கடே மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆர்யன் கான் வழக்கை அவர் முறையாக விசாரிக்கவில்லை எனவும், ஆர்யன் கானை விடுதலை செய்வதற்காக ஷாருக்கானை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கப்பலின் நடைபெற்ற சோதனையை வீடியோ பதிவு செய்யவில்லை எனவும், கைதானவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதி செய்ய மருத்துவப் பரிசோதனை செய்யவில்லை எனவும் பலரும் குற்றம் சாட்டினர்.
மேலும் படிக்க | ஆர்யன் கான் மீது எந்த தவறும் இல்லை - போதைப் பொருள் தடுப்பு பிரிவு
மேலும், வழக்கின் சாட்சிகளில் ஒருவரை வெற்றுத் தாளில் கையெழுத்திடச் செய்ததாகவும், அரசு வேலையில் சேர போலி சான்றிதழ் தந்ததாகவும் சமீர் வான்கடே மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆர்யன் கானின் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், மும்பையில் வருவாய் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு அண்மையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஆர்யன் கான் உள்ளிட்டோரின் பெயர் இடம் பெறவில்லை. மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என ஆறு பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரவலாக கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது அவர் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் புலனாய்வுப் பிரிவில் வரி செலுத்துவோர் சேவை இயக்குநரகத்தின் இயக்குநராக சமீர் வான்கடே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | இதை செய்ய பெண்களுக்கு கணவரின் அனுமதி தேவையில்லை! நீதிமன்றம் அதிரடி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR