பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் மகன் ஆரய்ன் கான் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த விருந்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து அந்த சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் செய்த சோதனையில் ஆர்யன் கான் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் சுமார் 20 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட பிறகு ஆர்துர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஆர்யன் கான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். முதல் இரண்டு முறை அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. ஜாமீன் மனு விசாரணையின்போது ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், " ஆர்யன் கான் ஒரு முறை மட்டும் போதை மருந்து எடுத்துக்கொள்ளவில்லை.
கிடைத்த அறிக்கையின்படி அவர் கடந்த சில வருடங்களாக அதை உட்கொண்டதாக தெரிகிறது. அர்பாஸ் (ஆர்யன் கானின் நண்பர்) என்பவரிடம் இருந்து ஆறு கிராம் சரஸ் பறிமுதல் செய்யப்பட்டது, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டபோது ஆர்யன் கானும் அவருடன் இருந்தார்" என்று நீதிமன்றத்தில்” கூறினார்.
இதனால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் உருவாகுமோ என ஷாரூக் தரப்பில் அச்சம் எழுந்தது. இருப்பினும் ஒருவழியாக அவருக்கு ஜாமீன் கிடைக்க ஒருவழியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்யன் கான் சிறையிலிருந்து வெளியில் வந்தார்.
இதற்கிடையே ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிக்க ஷாரூக் கானின் மேலாளர் பணபேரத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் படிக்க | கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய தடை
கிரண் கொஷாவி என்பவரும் ஷாரூக் கானின் மேலாளரும் பேசியதைத் தான் ஒட்டுக்கேட்டதாக பிரபாகர் சாகில் என்பவர் (கிரணின் பாதுகாவலர்) தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பிரபாகரைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகச் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.
மேலும் படிக்க | பாலியல் தொழிலாளிகளை கைது செய்யக்கூடாது - உச்சநீதிமன்றம்
இந்நிலையில் இவ்வழக்கில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு சார்பில் குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் போதிய ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கில் ஆர்யன் கான் உள்ளிட்ட 4 பேர் குற்றமற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR