இதை செய்ய பெண்களுக்கு கணவரின் அனுமதி தேவையில்லை! நீதிமன்றம் அதிரடி

பெண்கள் உறுப்பு தானம் செய்ய கணவரின் ஒப்புதல் அவசியமில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : May 31, 2022, 02:07 PM IST
  • பெண்ணின் உடலுக்கு அப்பெண்ணுக்கு மட்டுமே உரிமை
  • பெண்ணின் உடல், உறுப்பு, உயிரை யாருக்கும் எழுதித்தரவில்லை
இதை செய்ய பெண்களுக்கு கணவரின் அனுமதி தேவையில்லை! நீதிமன்றம் அதிரடி title=

பெண்களின் உரிமைகள் பல்வேறு கட்ட வாழ்க்கையில் பலரால் கட்டுப்படுத்தப்படுகிறது. பிறந்ததில் இருந்து தாய் தந்தை கட்டுப்பாட்டில் இயங்கும் வாழ்க்கை திருமணத்திற்கு பின்பு கணவர்களின் கையில் ஒப்படைக்கப்படுகிறது.

பெற்றோரின் இல்லத்தில் ஓரளவு சுதந்திரம் இருப்பினும் கணவர் இல்லத்தில் அவரது சுதந்திரம் பல நேரங்களில் பறிக்கப்படுகிறது. உடை, அலங்காரம், உறக்கம், பணி, வெளியே செல்லும் நேரம், உண்ணும் உணவு முதற்கொண்டு எல்லாமே ஒரு கட்டத்தில் மாற்றத்தையும் கட்டுப்பாட்டையும் சந்திக்கிறது.

சதந்திரம் கிடைத்தாலும் திருமணத்திற்கு பின் பொருப்புகள் தனித்து செயல்பட விடுவதில்லை. அதுவும் குழந்தைகளுக்காக வாழ ஆரம்பித்தப்பிறகு உறக்கம், உணவு என்பது யாருடைய இடையூறுமின்றி தானாகவே கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் மனைவி தனது உடல் உறுப்பை தானம் செய்ய கணவரின் ஒப்புதல் வேண்டும் என்ற வழிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | UPSC சிவில் சர்வீஸ் 2021 முடிவுகள் அறிவிப்பு; ஸ்ருதி சர்மா முதலிடம் 

டெல்லியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது தந்தையின் செயலிழந்த சிறுநீரகத்தை மாற்றியமைக்க தனது சிறுநீரகத்தை தானமளிக்க விரும்பினார். ஆனால் அவர் திருமணமானவர் என்பதால் அவரது சிறுநீரகத்தை தானமளிக்க கணவரின் "நோ அப்ஜெக்ஷன்" சான்றிதழ் அவசியம் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

ஆனால் அப்பெண்ணின் திருமண வாழ்க்கை தற்போது சரியான சூழலில் இல்லை என்பதாலும், தந்தைக்கு சிறுநீரக மாற்றம் உடனடியாக நடைப்பெறவேண்டும் என்பதாலும் அவர் கணவரின் ஒப்புதல் சான்றிதழை தற்போது பெற முடியாது, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என மருத்துவமனை நிர்வாகத்திடம் மன்றாடியுள்ளார்.

இருப்பினும் இது மருத்துவமனையின் விதிமுறைகளில் ஒன்றாகும், மீற முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து மறுத்துள்ளது. இதையடுத்து இது குறித்து அப்பெண் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, "ஒரு பெண் யாருக்கும் எழுதி தரப்பட்ட அடிமை இல்லை. ஒருவரின் உயிர், உடல், உறுப்பு போன்றவற்றுக்கு மற்றொரு நபர் உரிமை கொண்டாட முடியாது. பெண்ணின் உடல் மற்றும் உடல் உறுப்புகள் என்பது அந்த தனிப்பட்ட பெண்ணின் உரிமை. நெறுங்கிய உறவினருக்கு அளிக்கப்படும் உறுப்பு தானத்திற்கு கணவரின் ஒப்புதல் தேவை என்ற வலுக்கட்டாயம் எந்த சட்டத்திலும் இல்லை" என தீர்ப்பளித்தார்.

மேலும் படிக்க | பி.எஸ்சி முடித்தவர்களுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News