சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி: அதிகாரிகள் உறுதி!
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
சசிகவுக்குக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, சத்திய நாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்தார்.
இதன் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பெங்களூரு மாநகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக மற்றப்பட்டார்.
தற்போது சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது என்று அறிக்கை அளித்த ரூபா மீண்டும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
சசிகலாவுக்கு என்று அவருடைய அறையில் நவீன வசதியுடன் கூடிய எல்.இ.டி. தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. கட்டில், மெத்தை, தொலைக்காட்சி பெட்டி, சிறப்பு சமையலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் தனி சமையல் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதன்மூலம் அவர் விரும்பிய உணவுகள் சமைத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. சில வேளைகளில் சிறைக்கு வெளியே இருந்தும் அவருக்கு உணவு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.