கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, நாட்டில் பல மாநிலங்களில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், நாடு முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரி 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீடு செய்தார். மாணவர்களுக்கு, ஆன் லைன வகுப்புகள் காரணமாக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பாதிப்புகள் வருவதாகவும், வகுப்பறை சூழலில் கற்றுக் கொள்ளும் சிறந்த வாய்ப்பு மாணவர்களுக்கு பறி போகிறது என அந்த மனுவில் குறிப்பிடட்டிருந்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசூட், ‘இந்த மனு முற்றிலும் தவறானது; இது ஒரு விளம்பர வித்தை என்று நான் சொல்லவில்லை ஆனால் குழந்தைகள் இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது.’ என்றார். மனுதாரர் சார்பாக ஆஜராக வழக்கறிஞரிடம், மனுதாரரை படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறும், நீதிமன்றத்திற்கு இது போன்ற விஷயங்களுக்காக அணுகுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.


ALSO READ | தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு புதிதாக பாதிப்பு, 27 பேர் பலி


 மூன்றாவது அலை ஏற்படலாம் என்ற அச்சம் உள்ள நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசியை விரைவில் கொண்டு வர அரசு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளிகளை திறக்க வேண்டு என நீதித்துறை அரசுக்கு உத்தரவிட முடியாது.


மேலும், பள்ளிகளை திறப்பது குறித்த, பொதுவான வழிகாட்டுதல்களை வழங்குவது தொடர்பான விஷயத்தின் நீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை. நிர்வாக ரீதியிலான சிக்கலான விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. கொரோன அபரவல் நிலையை கருத்தில் கொண்டு அரசுகள் அதற்கேற்ற வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார் உச்ச நீதிமன்ற நீதிபதி.


இதற்கு பதிலளித்த வழக்கறிஞர்கள் மால்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்களையும் திறக்கலாம் எனவும், மாணவர்களுக்கு வீட்டிலேயே இருப்பதால், மன ரீதியிலான உடல் ரீதியிலான பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர் என்றார்


இதற்கு உச்ச நீதிமன்றம், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றன. அதோடு, கொரோனா நிலைமைக்கு ஏற்ப, கர்நாடகா போன்ற சில மாநிலங்கள் படிப்படியாக பள்ளிகளை திறக்கவும் முடிவு செய்துள்ளன. மனுவில், ஆதாரங்களுடன் விஷயம் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார். 


ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR